உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'வா' என்னும் வினைச்சொல் வரலாறு

111

இக் காலத்தில் 'வளை' என்று வழங்கிவரும் முதனிலை முற்காலத்தில் 'வள்' என்றே வழங்கிற்று.

=

வள்ளுதல் = வளைதல். வள்வு = வளைவு. வள்ளம் = வளைவு, வட்டம், = = வளைந்த அல்லது வட்டமான பொருள் (தொழிலாகு பெயர்). வள்ளி வளைந்த கொடி.

=

ஒருவன் தன் உறைவிடத்தினின்று அல்லது இருப்பிடத்தினின்று ஓரிடத்திற்குப் போனபின், அங்கிருந்து உறைவிடத்திற்கு வருவது முன்பின்னாகத் திரும்பியே யாதலால், திரும்பற் கருத்தினின்றே வருகைக் கருத்துப் பிறந்தது. அதனால், திரும்பற்பொருட் சொல்லினின்றே வருகைப் பொருட்சொல். தோன்றிற்று.

திரும்புதல் = வளைதல், திசைமாறி நோக்கி நிற்றல், மீளுதல்.

மீளுதல்

=

திரும்பிவருதல். காலையிற் சென்று மாலையில் திரும்பினான் என்றால், திரும்பினான் என்பது திரும்பி வந்ததைக் குறித்தல் காண்க.

வலமாகவோ இடமாகவோ திரும்புதலுங் கூடுமேனும், ஒருவன் தான் இடத்தினின்று புறப்பட்ட இடத்திற்குத் திரும்பிவருவது முன்பின்னாகத் திரும்பியே யென்பது, சொல்லாமலே விளங்கும்.

போன

திரும்பு என்னும் சொற்போன்றே, வளைதலைக் குறிக்கும் வேறுசில சொற்களும் மீளுதலைக் குறிக்கின்றன.

திரிதல் = வளைதல், மீளுதல். மடங்குதல் = வளைதல், மீளுதல். மறிதல்

=

வளைதல், மீளுதல்.

"திரிதல் மீளுதல்"

"மறிதர லென்பது மீளுத லாகும்'

(பிங். 7:202)

(திவா.9)

(பிங்.7:444)

"மறிதரல் திரிதரல் மடங்கல் மீளுதல்"

அளைமறிபாப்பு என்னும் பொருள்கோட் பெயரிலும், மறியென்னுஞ் சொல் வளைதலையும் திசைமாறித் திரும்புதலையுங் குறித்தல் காண்க.

ஆங்கிலத்தில் வளைதலை அல்லது திரும்புதலைக் குறிக்கும் turn என்னும் சொல், re என்னும் முன்னொட்டுப் பெற்றுத் திரும்பிவருதலைக் குறிக்கின்றது. He never turned up this side என்னும் தொடரியத்தில், அச் சொல் up என்னும் முன்னீட்டொடு கூடி, வருகைப் பொருளையும் உணர்த்து கின்றது.

இதுகாறுங் கூறியவற்றால், 'வா' என்னும் வினைச்சொல் வளைதலைக் குறிக்கும் 'வள்' என்னும் முதனிலையினின்றே திரிந்துள்ளமை பெறப்படும்.