உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'வா' என்னும் வினைச்சொல் வரலாறு

2.வா

113

வா என்னும் ஒருமையேவல் வினையில் மட்டும் வா என்னும் வடிவம் நிலைத்துள்ளது.

3.வ

வந்தான் என்னும் இறந்தகால வினைமுற்று; வந்தவன், வந்தான் என்னும் இ. கா.வினையாலணையும் பெயர்கள்; வந்த என்னும் இ. கா. பெயரெச்சம்; வந்து, வந்தால், வந்தக்கால், வந்தவிடத்து என்னும் வினையெச்சங்கள் ஆகியவற்றில் வ என்னும் வடிவம் நிலைத்துள்ளது. வம்மின், வம்மோ என்னும் பன்மை யேவல்வினைகள் வருமின், வருமோ என்பவற்றின் திரிபாயே யிருத்தல் வேண்டும்.

குறுகும்.

ஒருசில முதனிலைகளின் நெடின்முதல் இறந்தகால வினையிற்

ஒ.நோ:தா - தந்தான்

4.வர்

சா- (சத்தான்) - செத்தான்

நோ - நொந்தான்

காண்

கண்டான்

வரவு, வரல், வரத்து என்னும் வினைப்பெயர்கள்; வராமை என்னும் எ.மவினைப்பெயர்; வராதவன், வராதான் என்னும் எ.ம. வினையா லணையும் பெயர்கள்; வரல், வரேல், வராதி, வராதே, வராதிர். வராதீர், வரன்மின் என்னும் எ. ம. ஏவல் வினைகள்; வரல், வரற்க என்னும் எ.ம. வியங்கோள் வினைகள்; வரா, வராத என்னும் எ. ம. பெயரெச்சங்கள்; வர என்னும் நி. கா. பெயரெச்சம்; வரின் என்னும் எ. கா. பெயரெச்சம்; வராது, வராமை, வராமல், வராமே, வராக்கால், வராவிடின் என்னும் எ.ம. வினையெச்சங்கள் ஆகியவற்றில் வர் என்னும் வடிவம் நிலைத்துள்ளது.

5.வரு

இதை வரு என்று கொள்ளவும் இடமுண்டு.

வருதல், வருகை என்னும வினைப்பெயர்கள்; வருமை (மறுபிறப்பு) என்னும் பண்புப்பெயர்; வருகின்றவன், வருகின்றான், வருமவன் (வருபவன்), வருவான் என்னும் வினையாலணையும் பெயர்கள்; வருகின்றான், வருவான் என்னும் வினைமுற்றுகள்; வருதி,வருதிர் என்னும் ஏவல் வினைகள்; வருக. வருதல் என்னும் வியங்கோள் வினைகள்; வருவி, வருத்து என்னும் பிறவினைகள்; வருகின்ற, வரும் என்னும் பெயரெச்சங் கள்; வருவாய் என்னும் வினைத்தொகை ஆகியவற்றில் வரு என்னும் வடிவம் நிலைத்துள்ளது.