உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

வேர்ச்சொற் கட்டுரைகள்

இற்றைத் தமிழில் வா என்று திரிந்துள்ள அல்லது ஈறு கெட்டுள்ள வார் என்னும் மூலத்தமிழ் முதனிலை அல்லது ஒருமை யேவல், பிற திரவிடமொழிகளிற் பின்வருமாறு திரிந்துள்ளது.

வா கோத்தம், கோலாமி.

வா,வரி(க)

மலையாளம்

வா, வாமு, வ. -குய (kui)

வா,வாமு,

வா,

வர்

கடபா.

வரா, வரட் - கோண்டி (g).

வர் - நாய்க்கீ.

வெர் – பர்சி (j).

பா (b) - கன்னடம், குடகு. ப, பர் (b) - பிராகுவி (Brahui).

பர் (பினி), பா (b) - துளு. பர் (b) - மாலதோ.

பர் (னா) (b) - குருக்கு (ஒராஒன்).

ரா -தெலுங்கு.

ராவா

கொண்டா.

போ -துடவம் (Toda).

இத் திரிபுகளெல்லாம் மேற்காட்டிய தமிழ்த் திரிபுகளுள் அடங்கும்; அல்லது அவற்றால் விளக்கப்படும். இவற்றுள் முதன்மையானவை வா - பா (b), வர் -வ்ரா ரா. வா போ. என்னும் மூன்றே.

1. கன்னடத்தில் வகரமுதற் சொற்கள் பெரும்பாலும் எடுப்பொலிப்

பகரமுதலவாக (b) மாறிவிடுகின்றன.

-

எ டு: தமிழ்

கன்னடம்

தமிழ்

கன்னடம்

வங்கு (வளை)

பங்கு (nk)

வழங்கு

பழகு (g)

வட்டம்

பட்ட

வழலிக்கை

பழல்கெ

வடுகு

படகு (g)

வழி

பளி

வணங்கு

பக்கு (gg)

வள்ளம்

பள்ள

வயல்

பயல்

வளர்

பளெ

வயலை

பயலு

வளா

பளா (bh)

வயிறு

வரை

பசிறு பரெ

வளை

பளெ

வற்று

பத்து

வலம்

பல

வற

பறு