உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

""

வேர்ச்சொற் கட்டுரைகள்

""

"பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர். "தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா "பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்." "முன்னும் பின்னும் வருபவை நாடி

ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல் தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே.

""

(மேற்படி.2)

(மேற்படி.3)

29

(தொல்.96)

(மேற்படி 1)

(தொல்.பெய.91)

இங்ஙனம் வேறெவ்வகை மொழியிலுங் கூறப்படவில்லை. கூறவும் இயலாது, பிறமொழிகள் திரிமொழிகளாதலான். அத்தகைத் தன்னேரில்லாதது இயன்மொழியான தமிழே.

வா என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் போ என்பது. அது புகு என்பதன் திரிபு. புகுதல் உள்ளே செல்லுதல். வருதல் உள்ளிருந்து வெளியே திரும்பி வருதல். இவ் விழை இவ் வூசியின் காதிற்குள் போகுமா என்னும் வழக்கை நோக்குக. வணங்குதல் என்னுஞ் சொல், முதலில் உடம்பு வளைந்து அல்லது தலை குனிந்து கும்பிடுதலையே குறித்தது. இன்றோ, பொதுவாகக் கைகுவித்தலை மட்டுங் குறிக்கின்றது. இங்ஙனமே, முன்பு ஒன்றன் உட்புகுதலைக் குறித்த போ என்னுஞ் சொல், இன்று ஓரிடத்திற்குச் செல்லுதலை மட்டுங் குறிக்கின்றது. தொடக்கத்தில், ஒன்றைத் துளைத்து ஊடுருவிச் சென்றதைக் குறித்த துருவுதல் என்னும் சொல், இன்று 'நாடு துருவுதல்' ‘வான் துருவுதல்' என்று திறந்த வெளியிடத்தைக் கடந்து செல்லுதலையுங் குறித்தல் காண்க. இது போன்றே, ஓரிடத்தினின்று திரும்பி வருதல் என்று முதற்கண் பொருள்பட்ட வார்தல் அல்லது வருதல் என்னும் வினைச்சொல், இன்று வருதல் என்றுமட்டும் பொருள் படுகின்றது.

இன்றும், தன் இடத்தினின்று புறப்படும் ஒருவன் தன்னையே நோக்கிச் சொல்லின், போய் வருகிறேன் என்றுதான் சொல்வான். வந்து போகிறேன் எனின், அஃது அயன்மனையிற் சொல்வதாயிருத்தல் வேண்டும்; அல்லது தானே மீண்டும் தன்மனைக்கு வந்து போதலைக் குறித்ததாகல் வேண்டும்.

ஒருவனால், தன் இடத்தினின்று நீங்குவதெல்லாம் செல்லுதல் வினையாலும் தன் இடத்தைச் சேர்வதெல்லாம் வருதல் வினையாலும் குறிக்கப்படுதலின், நீ வருக, அவன் வருக என்று, முன்னிலையானும் படர்க்கையானுமாகிய பிறர் தன்னிடம் சேரும் வினையும் வருகை வினையாலேயே குறிக்கப்படும். அவ் வீரிடத்தாரும் அத் தன்மையானை