உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'வா' என்னும் வினைச்சொல் வரலாறு

117

முன்னிலைப்படுத்தின், நான் வருகிறேன். நான் வருகிறேன் என்று தனித்தனி சொல்லலாம். அவ்வாறன்றி நான் செல்கிறேன் எனின், படர்க்கையானின் இடத்தை நோக்கியதாகவே யிருத்தல் கூடும்.

அது

இனி, வார் அல்லது வா என்னும் வினைச்சொல் பல்வேறு வடிவில் திரவிட மொழிகளில் வழங்குவது மட்டுமன்றி, மேலை ஆரிய மொழியாகிய இலத்தீனிலும், சென்று மூலத்தை யொட்டி வழங்குவது வியக்கத் தக்கதாகும். ளகரமெய் தமிழிலும் திரவிடத்திலும் னகரமெய்யாகவுந் திரியும்.

எ-டு: தெள்-தென்-தேன், தெளிவு, தேறல் என்னும் சொற்களை நோக்குக.

கொள்-தெ. கொன், கொனு, தெ. கொனி = கொண்டு.

வள்-வன்-வென்-L. veni to come. Veni என்னும் மூலத்தினின்று, ad- vent, avenue, circumvent, convene, event, intervene, invent, prevent, revenue, subvent, venue முதலிய சொற்கள் திரிந்துள்ளன.

supervene,

ஒவ்வொன்றினின்றும் சில பல சொற்கள் கிளைத்துள்ளன.

இவற்றுள்

எ-டு: convene-convent, conventual, convention, conventional, convention- ary, conventicle, convenient, convenience முதலியன.

கலிபோர்னியாப் பல்கலைக்கழகச் சமற்கிருதமொழி நூற் பேராசிரியர் எம். பி. எமெனோ (M.B. Emeneau) திரவிட மொழிநூலும் இன நூலும் நாட்டுப்புறக் கதைகளும்பற்றி எழுதி, அண்ணாமலை பல்கலைக் கழகம் வெளியிட்ட கட்டுரைக் தொகுதியில் (Collected Papers) 6ஆம் கட்டுரை 'வா' 'தார' என்னும் திரவிட வினைச்சொற்கள் (The Dravidian Verbs 'come' and give) என்பது.

அதில், அவர் தமக்குத் தமிழிற் சிறப்பறிவின்மையாலும் தமிழ்ப் பொத்தகங்கள் கிட்டாமையாலும் ஈ, தா, கொடுவென்னும் சொற்களின் நுண்பொருள் வேறுபாட்டைத் தெரிந்துகொள்ள முடியவில்லை யென்று எழுதியுள்ளதற் கொப்பவே, 'வா', 'தா' என்னும் வினைச்சொற்கள்பற்றிய அவர் ஆராய்ச்சி முடிபுகளும் உள்ளன.

அவை வருமாறு:

1. வ, த என்பன மூலத்திரவிட அடிகள் (Proto Dravidian stems). 2. அ, அர் என்பன அவ் வடிகள் தன்மை முன்னிலை வினைகளாகும் போது சேர்க்கப்படும் இடைமாற்ற ஈறுகள் (tran- sition suffixes).

3. அ உடன்பாட்டு வடிவுகளிலும், அர் எதிர்மறை வடிவுகளிலும் ஆளப்பட்டன.

4. அ+அ = ஆ என்பது சொல்லொலியன் மறுநிலை மாற்று (Morphonemic alternation).