உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

வேர்ச்சொற் கட்டுரைகள்

5. வ, வந்த் என்பன வா என்னும் வினைக்கும், த, தந்த் என்பன தா என்னும் வினைக்கும், உரிய இணையடிகள்.

6. பழந்தமிழில் வார் என்றிருந்த எதிர்மறையடி புதுத் தமிழில் வர் என்று குறுகிற்று.

7. குய்மொழி திரவிட மொழியாராய்ச்சிக்குத் தமிழினும் மிகத் துணை புரிவது.

இவற்றின் பொருந்தாமையை ஈண்டு விளக்கின் விரியும். அறிஞர் கண்டுகொள்க.

தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமைத் தன்மைகளையும் வேர்ச்சொல் விளக்கத்தையும் தமிழரே அறியாதிருக்கும் போது, அயன்மொழி பேசும் வெளிநாட்டார் சமற்கிருத அடிப்படையில் திரவிட மூலமொழியின் அடிமுடி காண்பது, நால்வர் பாராதார் நால்வாய் கண்ட கதையே யொக்கும்.

,

இனி வெளிவரும் 'தா' என்னும் வினைச்சொல் வரலாறு, இங்குக் கூறியதையெல்லாம் உறுதிப்படுத்தும்.