உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள்' (விரும்பற் கருத்துவேர்)

இழைத்தல்மொழிச் (Articulate Speech) சொற்கள் பெரும்பாலும் உகரச்சுட்டினின்று தோன்றிய உல் என்னும் மூலவேரினின்றும் குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் வழிவேர்களினின்றுமே தோன்றியுள்ளன. தமிழில் வுகரம் சொன்முதல் வராமையால், வகரமுதற்சொற்களெல்லாம் புல், முல் என்னும் ரு அவற்றினின்று தோன்றிய சொற்களினின்றுமே திரிந்துள்ளன. வகரமுத லென்றது வகர மெய்யொடு கூடிச் சொன்முதல் வரும் எண்ணுயிரையும்.

வேர்களினின்றும்

வட்டக் கருத்து வேரான வல் என்பது முல் என்பதன் திரிபென்று முன்னரே காட்டப்பட்டது. விரும்பற் கருத்து வேரான விள் என்பது புல் என்னும் வேரின் திரிபான பள் என்னும் அடியின் திரிபென்று இங்கு விளக்கப்படும்.

புல்லுதல் = பொருந்துதல், ஒத்தல், தழுவுதல், புணர்தல், நட்பாதல், விரும்புதல். புரிதல் = விரும்புதல், புகல்தல் = விரும்புதல்.

புல்-புள்-பிள்-பிண்-பிணா-பிண-பிணவு-பிணவல், பிணை. பிள்-பெள்-பெண்-பேண். "பிணையும் பேணும் பெட்பின் பொருள'

(தொல். உரி.40).

பிள்-Gk.phil.

பிள்-விள் விளை

=

விருப்பம். விளையாடுதல்

ஆடியோடித் திரிதல் அல்லது ஒரு வினை செய்தல்.

=

விருப்பமாய்

"கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு." (தொல் உரி.) என்பதற்கேற்ப. விளையாடல் என்னும் சொற்கு, பயிர்த்தொழில் செய்தல்போல் நடித்து மகிழ்தல் என்னும் பொருளும் பொருந்துமேனும், விரும்பியாடுதல் எனனும் பொருளே சிறந்ததாகத் தோன்றுகின்றது.

விள்-விழு.விழுதல்

=

விரும்புதல், விருப்பங் கொள்ளுதல்.

"ஐம்புலன்மேல் விழுந்து" (திருநூற். 13).

விழு-விழ். வீழ்தல் = விரும்புதல். "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிது கொல்” (குறள். 1103).

=

விரும்புதல். "இன்பம் விழையான்

விழு-விழை. விழைதல் வினைவிளைவான்” (குறள். 615).