உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

வேர்ச்சொற் கட்டுரைகள்

விழை-விழைச்சு = புணர்ச்சி (பிங்.)

ஒ.நோ:Gk.philos, desire.

விழை-விழைச்சி = 1. புணர்ச்சி. 'அறுவகைப்பட்ட பாசாண்டிகரும் இணைவிழைச்சி தீதென்ப' (இறை. 1, உரை). 2. இன்பநுகர்ச்சி. "மன்னர் விழைச்சி” (சிலப். 2 : 2, உரை).

விழை-விழைந்தான்-விழைந்தோன் = (பிங்.) நண்பன், கணவன். விழை-விடை-விடையன் = காமுகன் (இ.வ.)

விடை-விடாய். விடாய்த்தல் = 1. ஆசைப்படுதல். 2. தாகமெடுத்தல். விடாய்த்த காலத்திலே வாய் நீரூறுவதற்கு' (மலைபடு. 136, உரை). 3. களைப்படைதல். “எருது உழுகிறது, உண்ணி விடாய்க்கிறது. (பழ.). விடாய் = 1. ஆசை (இ.வ.). 2. தாகம். "தண்ணீர் விடாயெடுத்தால்" இராமநா. யுத்த. 59). 3. களைப்பு (நாமதீப 633). விள்-விர்-விரு-விரும்பு. விரும்புதல் = ஆசைப்படுதல். விரும்பு-விருப்பு=ஆசை, அன்பு. “விருப்பறாச் சுற்றம்" (குறள். 522) விருப்பு-விருப்பம்=1. ஆசை (சூடா.). 2. அன்பு. 3. பற்று (பிங்.)

விரு-விருந்து=1. வீட்டிற்கு அல்லது ஊருக்குப் புதிதாய் வந்தவர்க்கு விரும்பிப் படைக்கும் சிறந்த வுணவு. "யாது செய்வேன்கொல் விருந்து’ (குறள். 1211). 2. வீட்டிற்குப் புதிதாக வந்த விருந்தாள். "விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கை” (புறம். 266). 3. போற்றப்படும் விருந்தாள். “விருந்தா யடைகுறுவள் விண்" (பு. வெ. 3: 12). 4. புதியவள். 5. புதுமை. 'விருந்து புனலயர” (பரிபா. 6 40). 6. புதுவகையான பனுவல், எண்வகை வனப்புக்களுளொன்று. “விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" (தொல் செய். 237). 7. (இக்கா) சிறந்த வுண்டி.

விருந்து-விருந்தம் = புது மனைவி, மனைவி (சூடா.)

விருந்து-விருந்தனை = விருந்தோம்பும் அல்லது புது மனைவி, மனைவி (பிங்.).

விருந்தாடுதல் = ஒரு வீட்டிற்கு விருந்தாளாகப் போதல்.

விருந்தாடு-விருந்தாடி = விருந்தாளி.

விருந்தோம்புதல் = புதிதாக வந்த விருந்தினரைப் பேணுதல்.

விருந்தினன் = 1. விருந்தாளி. 2. புதியவன்.

விள்-வெள் - வெண்டு. வெண்டுதல் = இல்லாததற்கு ஆசைப்படுதல். - அவன் சோற்றுக்கு வெண்டிக் கிடக்கிறான் (இ.வ).

வெள்-வெள்கு-வெஃகு. வெஃகுதல் 1. மிக விரும்புதல். “அருள் வெஃகி” (குறள். 176). 2.பிறர் பொருள்மேல் ஆசை கொள்ளுதல். "இலமென்று வெஃகுதல் செய்யார்” (குறள்.174)