உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

வேர்ச்சொற் கட்டுரைகள்

6. சிற்றரசன் (சூடா.). 7. சிறந்த ஆண்மகன் (யாழ். அக.). 8. பண்டைத் தமிழரசரால் வேளாண் தலைவர்க்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பெயர். 'செம்பியன் தமிழவேள் என்னுங் குலப் பெயரும்' S.I.I. III,221). 9. குறுநில மன்னரான வேளிர் குலத்தான். “தொன்முதிர் வேளிர்" (புறம். 24). 10. வேளி ராண்ட வேள்புல வரசனான சளுக்கு வேந்தன் (பிங்.) 11. தாகம்.

வேள்புலம் = வேளிராண்ட நாடு.

வேள்புலவரசன் = வேளிர் வழிவந்த சளுக்கிய வரசன்.

வேள் -வேள்வு = 1. திருமணத்தில் மணமக்கள் வீட்டார் எடுக்கும் உணவுப் பண்ட வரிசை (செ. நா.). 2. வேள்வி. “விழவும் வேள்வும் விடுத் தலொன றின்மையால்" (சீவக. 138).

வேள் -வேள்வி = 1. திருமணம். "நாம் முன்பு தொண்டுகொண்ட வேள்வியில்" (பெரியபு. தடுத்தாட். 127) 2. கொடை (பிங்.). 3.பூசனை. "வேள்வியி னழகியல் விளம்பு வோரும்" (பரிபா 19:43), 4. அறவினை. 'ஆள்வினை வேள்வியவன்" (பு.வெ.9: 27) 5. விருந்து. 6. களவேள்வி. ‘பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின்” (அகம். 13). 7. ஆரிய வேள்வி. "முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி" (அகம் 220).

66

66

ம., தெ., வேள்வி,க. பேலுவெ (b).

வேள்-வேளாளன் = புதிதாய் வந்தவரை விரும்பி விருந்தோம்பிப் பேணுபவன்.

"வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்" (திரிகடு. 12).

வேளாண்மை = 1. புதியவரை விருந்தோம்பிப் பேணுந்தன்மை. “விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" (குறள். 81). 2. பிறரைப் பேணிக்காக்குந் தன்மை. "வேளாண்மை செய்து விருந்தோம்பி" (பழ. 151). 3. வேளாளர் செய்யும் பயிர்த்தொழில்.

வேளாண்மை-வெள்ளாண்மை-வெள்ளாமை = (கொ.வ.).=1. பயிர்த் தொழில். 2. ஒருமுறை விளைப்பு.

வேள் - வேளான் = ஒருசார் பணியாளர்க்குப் பண்டை வேந்தர் வழங்கிய பட்டப்பெயர். "மதுராந்தக மூவேந்த வேளான்” (S.I.I.ii,10). வேள்-வேளிர் = 1. பண்டைத் தமிழ் நாடாண்ட வேளாண்குடிக் குறுநில மன்னர். “நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே" (புறம். 201). 2. சிற்றரசர் (சூடா.). 3. சளுக்கிய வரசர் (திவா).

வேளாளன் (ஆ.பா.)-வேளாட்டி = அரண்மனையில் அல்லது பெருமக்க ளில்லத்தில் பணி செய்யும் வேளாளர் குலப்பெண்.

வேளாட்டி-வெள்ளாட்டி

=

பணிப்பெண்.

வேள் - வேளம் = பண்டைத் தமிழ் வேந்தர், சிறப்பாகச் சோழர், தம்மாற் கொல்லப்பட்ட அல்லது சிறைபிடிக்கப்பட்ட பகைவேந்தரின்