உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள்' (விரும்பற் கருத்துவேர்)

123

தேவியரை, வேளாட்டியராக அல்லது அடிமையராக வாழும்படி வைத்த அரணிடம் அல்லது சிறைக்கோட்டம். “மீனவர் கானம்புக... வேளம் புகு மடவீர்” (கலிங். 41). “வீரபாண்டியனை முடித்தலை கொண்டு அவன் மடக் கொடியை வேளமேற்றி" (S. I.I. iii, 217).

வேள்+நாடு = வேணாடு, திருவாங்கூர் அரசியத்தின் பெரும் பகுதி அடங்கிய நிலப்பகுதி, பண்டைப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று. வேள் - வேண் 1. விருப்பம் (யாழ். அக.). ம.வேண். 2. வேணாடு. "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி" (நன். 272,மயிலை). வேண் + அவா = வேணவா (மீமிசைச்சொல்) =

+

=

வேட்கைப் பெருக்கம்.

பெரு விருப்பம்,

இதை வேட்கை+அவா என்று பிரிப்பது பொருந்தாது.

வேள்+மகன் = வேண்மகன் வேண்மான் = வேளிர்குல

மகன், வேளிர் குடியான். “நன்னன் வேண்மான்" (அகம். 97). வேள்+மகள் = வேண்மகள்-வேண்மாள் = 1. வேளிர் குல மகள், வேளிர் குடியாள். "வேண்மாள் அந்துவஞ்செள்ளை" (பதிற். 9ஆம். பதி).

வேள்-வேட்கை = 1. விருப்பம். 2. பற்றுள்ளம். "வேட்கை யெல்லாம் விடுத்...உன் திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கட் கூட்டினை' (திவ். திருவாய். 4:9:9). 3. காமவிருப்பம். (நம்பியகச்.36, உரை). 4. சூலியர் வயா. 5. தாகம், நீர் விருப்பம்.

வேள்+நீர் = வேணீர் = தாகந் தணியப் பருகுநீர் "வேணீ ருண்ட குடையோ ரன்னர்” (கலித். 23).

வேட்கைநீர் = தாகந் தணிக்கு நீர் (W.).

வேள்+நூல் = வேணூல் = காமநூல் "அம்மட வாரிய லானவும்... ஆடவர் செய்கையும்...விளம்பிடும் வேணூல்" (கந்தபு. இந்திரபுரி.25).

வேள்-வேட்பு=விருப்பம் (யாழ். அக.).

வேட்பு-வேட்பாளர் (இக்கா.) = நாடாளுமன்ற அல்லது நடுவணாளு மன்ற வுறுப்பாண்மை விரும்புவோர்.

வேள் - வேட்சி

=

விருப்பம். "வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே”. (திருமந். 437).

வேள்-வேட்சை = விருப்பம் (யாழ். அக.).

வேள்-வேண்டு. வேண்டுதல் = 1. விரும்புதல். “பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன்" (கலித். 145). 2.மன்றாடுதல் (பிரார்த்தித்தல்). "வேண்டித் தேவ ரிரக்கவந்து பிறந்ததும்" (திவ். திருவாய். 6:4:5). 3. கோருதல். அண்மையில் வெளிவர விருக்கும் எங்கள் கழகஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை விடுக்குமாறுதங்களை வேண்டுகின்றேன் (உ.வ.).