உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேண்டல் = 1. விரும்புகை. 2. குறையிரப்பு (விண்ணப்பம்).

"

வேண்டற்பாடு = 1. விருப்பம் (தக்கயாகப். 506, உரை) 2. தேவை. 3.பெருமை. "அவன் தொழும்படியான வேண்டற்பா டுடைய தான்தொழா நின்றாள்" (ஈடு, 2:4 4). 4. தொக்குநிற்குஞ் சொல் அல்லது சொற்றொடர். நின்ற வில்லி, “வீரபத்திர தேவர்க்கு எதிரே பொருதற்கு (நின்ற வில்லி) என்பது வேண்டற்பாடு" (தக்கயாகப் 704, உரை).

வேண்டாதவன்

=

விருப்பப் படாதவன், தேவையில்லாதவன்,

பயனற்றவன், பகைவன்.

வேண்டா = 1. (வி.மு.) வேண்டியதில்லை. “அறத்தா றிதுவென வேண்டா" (குறள். 37.). 2. (பெ.) தேவையல்லாதன. வேண்டா கூறிப் பயனில்லை. 3. விரும்பா. (ப. பல. எ. ம. வி. மு.) மக்கள் போன்றே விலங்கு பறவைகளும் கூண்டுள்ளிருக்க வேண்டா.

வேண்டாம் = 1. தேவையின்மை குறிக்கும் வினைமுற்று எங்கட்குப் பணம் வேண்டாம்; பொத்தகம்தான் வேண்டும் 2. வெறுப்பானது என்பதைக் குறிக்கும் வினைமுற்று. எங்கட்கு இந்திவேண்டாம்; ஆங்கிலந்தான் வேண்டும்; 3. செய்யற்க என்னும் விலக்குப் பொருளில் வரும் துணைவினை.

"தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.

வேண்டாம்

-

வேண்டா (இலக்கிய வழக்கு).

""

(உலக)

வேண்டாமை = 1. விரும்பாமை. 2. அவாவின்மை. "வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை” (குறள். 363). 3.வெறுப்பு. "வேண்டுதல் வேண் டாமை யிலான்” (குறள்.4)

வேண்டி = பொருட்டு. மாணவரும் மாநாட்டிற்கு வர வேண்டி இன்று விடுமுறை விடப்பட்டது.

வேண்டிக்கொள்ளுதல்

=

ஆர்வத்தொடு பணிந்து கேட்டல்,

து

தெய்வத்திடம் ஊக்கமாக மன்றாடுதல்.

வேண்டிய = (பெ. எ.) 1. விரும்பிய. 2. தேவையான. 3. இன்றியமையாத. 4. போதுமான. 5. மிகுதியான.

பெ. விரும்பியவை. "வேண்டிய வேண்டியாங் கெய்தலால்" (குறள்.5). வி.மு. வேண்டி. வேண்டிய-வேண (கொச்சை).

வேண்டியவன் = 1. விரும்பியவன். 2. விருப்பமானவன். 3. நெருங் கிய நண்பன் அல்லது உறவினன். 4. தேவையானவன். 5. மன்றாடியவன். வேண்டியது -வேணது (கொச்சை).

வேண்டுதல்=1. விருப்பு. "வேண்டுதல். வேண் டாமை யிலான் (குறள்.4)