உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

வேர்ச்சொற் கட்டுரைகள்

எ-டு: யாம் வேண்டாம் = யாம் விரும்போம்.

2) ஒழுங்கற்ற வினை (Irregular Verb)

எ-டு: எனக்கு நீ (உன் தொடர்பு வேண்டாம், "நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்" (உலக.).

'வேண்டும்' என்னும் உடன்பாட்டு வினையும் "வேண்டாம் என்னும் எதிர்மறை வினையும் ஒழுங்கற்ற வினையாயின், ஒரு குறிப்பிட்ட திணை பால் எண் இடத்திற்கு மட்டும் உரியனவாகாது இருதிணை மூவிட ஐம்பாலுக்கும் பொதுவாய், 4ஆம் வேற்றுமைப் பெயரையும் தொழிற்பெயரையும் நிகழ்கால வினையெச்சத்தையும் அடுத்து வருதல்

காண்க.

வியங்கோள் வினை. "வேந்தனீயாகி வைய மிசைபடக் காத்தல் வேண்டும்" (சீவக. 201).

வேண்டும்-வேணும் (கொச்சை).

வேண்டுமென்று = 1. நெஞ்சார வேட்டை யாடுகையில் வேண்டுமென்று அவனைச் சுட்டான் (உ.வ.). 2. ஒட்டாரமாய். வேண்டுமென்று தன் குலத்தானையே வேலையிலமர்த்தினான்.

வேள்-வேட்கு. வேட்குதல்

=

விரும்புதல், வேண்டுதல்.

வேட்கு-க. பேக்கு(b) . வேட்கும்-க. பேக்கும் (b) = வேண்டும்.

ஒ.நோ. E.beg, வ. பிக்ஷக்ஷ் (bhiksh).

வேட்டல் = ஏற்கை, இரத்தல் (அரு.நி.).

வேண்- வேடு-வேடை= 1. வேட்கை, "வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே" (திருப்பு. 288). 2. காமநோய். "கொண்டதோர் வேடை தீரும்" (கந்தபு. ததீசியுத்.74). 3. தாகம். "சால வருந்தின வேடையோடி" (கம்பரா. திருவடி. 24).

=

வேள் -வேட்டம் (வேள்+தம்) விருப்பம். "உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்கு” (புறம். 214). 2. விரும்பிய பொருள். "வேட்டம் போகிய மாஅ லஞ்சிறை மணிநிறத் தும்பி" (கலித். 46). 3. விரும்பிச் செய்யுந் தொழில் அல்லது வினை, வேட்டை. "வயநாய் பிற்பட வேட்டம் போகிய குறவன்" (அகம். 182). 4. தலைவேட்டை யாடுங் கொலை (பிங்.).

ம. வேட்ட, தெ., க. வேட்ட.

=

வேள்-வேட்டை (வேள்+தை) விலங்கு பறவைகளை விரும்பிப் பிடிக்கும் வினை அல்லது தொழில். "வேட்டை வேட்கை மிக” (கம்பரா. நகர் நீங். 74). 2. வேட்டையிற் கிடைக்கும் பொருள். "பிடித்தலு நமக்கு வேட்டை வாய்த்த தின்று” (திருவாலவா. 44. 38). 3. வேட்டையில் நேருங் கொலை. “ஆடுவனே யின்னும் ஆருயிர் வேட்டை” (திருநூற்.56).