உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள் (வெம்மை யொண்மை வெண்மை வெறுமைக் கருத்துவேர்)

வே-வேகு-வேகம்

=

135

சினம். “ஓவா வேகமோ டுருத்து" (கலித்.103).

வேகு-வேகி. வேகித்தல் = சினத்தல். "சம்பரன் வேகித்து...வதஞ் செய்வான்" (ஞானவா. பீம. 16).

வேகி

=

சினத்தன். "வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட

லோரார் (சி.சி.1:50).

வேகு- வெகுள். வெகுள்தல் விழுமியோர் (நாலடி. 64).

=

சினத்தல். "வேர்த்து வெகுளார்

வெகுள்-வெகுளி = சினம். “குணமென்னுங் குன்றேறி நின்றார்

வெகுளி (குறள்.29).

=

சினங்கொள்ளுதல்.

வே-வேந்து-வெந்தி. வெந்தித்தல் "வெந்திப்புடன்வரு மவுணேசனையே" (திருப்பு. 136)

வெந்து-வெஞ்சு-வெஞ்சன் = சினம். (யாழ். அக.)

2. ஒண்மைக் கருத்து

ஒண்மை ஒளிர்வு. விள்ளுதல் = தெளிவாதல்.

விள்-விள-விளங்கு.

விளங்குதல் = (செ. கு. வி.). 1. பளபளப்பாதல். 2. ஒளிர்தல், திகழ்தல். "பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே" (புறம். 8). 3. பெயர் அல்லது புகழ் பரவுதல். அவன் பெயர் எங்கும் விளங்கும் (உ.வ.). 4. தெளிவாதல். “சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்" (நன்.13). 5. தழைத்தல். அந்தக்குடி விளங்கவில்லை (உ.வ.). 6. மேம்படுதல். "திறல் விளங்கு தேர்த்தானை" (பு.வெ.

4:8).

(செ. குன்றாவி.) அறிதல் (யாழ்ப்).

ம. விளங்ஙு(க), தெ. வெளுங்கு, க.பெளகு (belagu).

விளங்கு-விளக்கு. விளக்குதல் = 1. தெளிவாக்குதல். “சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி” (மலைபடு. 79). 2. பெயர் பரவச் செய்தல். "தம்மை விளக்குமால்" (நாலடி. 132). 3. துலக்குதல். பல்லை விளக்குகிறான். கலங்களைக் காலையில் வேலைக்காரி விளக்குவாள் (உ.வ.). 4. வீட்டைப் பெருக்கித் துப்புரவாக்குதல். விளக்குமாறு.5. மாழையைப் பொடியிட்டுப் பற்றவைத்தல். “பொன்னின் பட்டைமேற் குண்டுவைத்து விளக்கினவளை (S.I.Iii, 182). 6. உண்டி பரிமாறுதல். "அட்டன யாவையும் விளக்கின மிவர்க்கே” (விநாயகபு. 53:29).

விளக்கு-விளக்கணம் = பொடி வைத்துப் பொருத்துகை (யாழ். அக.).

விளக்கு = 1. தீவம். “எல்லா விளக்கும் விளக்கல்ல” (குறள்.299). 2. ஒளி, ஒளிப்பிழம்பு. (அக.நி.). 3. துலக்கம்பெறச் செய்கை. "நிலம் விளக்குறுப்ப” (மதுரைக். 705). 4. பதினைந்தாம் நாண்மீன் (சோதி).