உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

வேர்ச்சொற் கட்டுரைகள்

(உ.வ). 3. வலிமை. 4. விரைவு. நீராவித்தொடர் வண்டியினும் மின்றொடர் வண்டி வேகமாய்ச் செல்லும் (உ.வ). 5. விசை. குற்றாலம் அருவி வேகமாய் விழுகிறது (உ.வ.).

வேகுவேகெனல்

=

விரைவுக்குறிப்பு. வேகுவேகென்று ஓடி

வருகிறான்.

தீ வேகமுள்ள தாதலால், வேதற்கருத்தில் விரைவுக் கருத்துத்

தோன்றிற்று.

ஒ.நோ:

வெய்து = வெப்பமாக, விரைவாக. வெய்துயிர்த்தல் = வெப்பமாக மூச்சுவிடுதல்.

வெய்துகெடுதல் = விரைந்து கெடுதல் (குறள். 569.).

சினம் தீப்போன்றது. ஆதலாற் சினக்கருத்து வெம்மையினின்று தோன்றும் கிளைக் கருத்தாகும். "சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி" (குறள். 306) என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க.

1. சினக்கருத்து

விள்-விளம் = கடுஞ்சினம். விருந்திற்குத் தன்னை யழைக்க வில்லை யென்று விளமெடுத்துத் திரிகின்றான் (உ.வ.).

விளம்-விளர் = பெருஞ்சினம் (அரு. நி.).

விள்-விளி. விளிதல் = சினத்தல். “விளிந்தாரே போலப் பிறராகி" (பழ.

182).

விளர்-வியர். வியர்த்தல் = சினங்கொள்ளுதல் (பிங்.) வியர்-வியர்ப்பு = 1. சினம், சினக்குறிப்பு (திவா.). வியர்-வியர்வை = சினக்குறிப்பு (பிங்.).

வியர்-வெயர். வெயர்த்தல் = சினங்கொள்ளுதல்.

வெயர் - வெயர்ப்பு = சினம். "வெஞ்சமம் விளைத்தன வியர்ப்பால்' (இரகு.திக்குவி. 112).

வெயர்-வேர். வேர்த்தல் = சினத்தல். "பாலன்மேல் வேர்ப்பது செய்த வெங்கூற்று" (தேவா. 82:7).

வேர் = சினம் (W.).

வெம்மை = சினம். "வேக யானை வெம்மையிற் கைக்கொள' (சிலப். 15:47).

வெப்பு = சினம். "வெப்புடைக் கொடிய மன்னன்" (கம்பரா.மிதிலைக்

99).

வெப்பு-வெப்பம் = சினம்.

வேதல் = சினமுறுதல். “கட்டூர் நாப்பண் வெந்துவாய் மடித்து" (புறம். 295).