உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




133

விள் (வெம்மை யொண்மை வெண்மை வெறுமைக் கருத்துவேர்) வேளை வெந்தை வல்சியாக" (புறம். 246). 3. பிட்டு (பிங்.). "வெந்தை தோசையே (கந்தபு. தானப்ப. 8)

வெந்தயம் (வெந்த அயம்) = வெந்த இரும்பு, இருப்புநீறு. "வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன" (காளமுகில்). வெந்த ஆணம்-வெந்தாணம்-வெஞ்சாணம்-வெஞ்சணம் = சமைத்த கூட்டு.

வெஞ்சணம் - வெஞ்சனம் = 1. சமைத்த கறியுணவு 2. கறிக்குதவும்

பண்டம்.

வெஞ்சனம் - வெஞ்சினம்."வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது (காளமுகில்).

=

வே-வேக்காடு = 1. எரிகை. செங்கலுக்கு வேக்காடு பற்றாது. 2. கொதிக்கும் நீரில் அல்லது எண்ணெயில் வேகுகை. 3. அழற்சி. 4. வெந்த புண் (W.) 5. வெப்பம். இன்றைக்குக் காற்றில்லாமல் வேக்காடாயிருக்கிறது (உ.வ.). 6. பொறாமை. அவர் வருந்திப் படித்துத் தேறிப் பரிசு பெற்றால் உனக்கேன் இந்த வேக்காடு? (உ.வ.).

வே-வேக்காளம் = 1. வேக்காடு. 2. மனத்துயர் (யாழ் அக.)

வேக்காளம்-வெக்காளம் = 1. புழுக்கம். 2. துயரம். (யாழ். அக.) வெக்காளம்-வெக்காளி வெக்காளித்தல் = துயரப்படுதல். (யாழ். அக.) வெக்காளிப்பு = வெக்காளம்.

வெக்காளி - வெக்களி வெக்களித்தல் = மனம் புழுங்குதல், துயர்தல். வே-வேம்பு = 1. வெப்பமான காலத்தில் தழைக்கும் அல்லது பழத்தினாலும் எண்ணெயாலும் சூடுண்டாக்கும் மரம். "மனைக்கு வேம்பு. மன்றுக்குப் புளி" (பழ.). 2. வேப்பங்காயிலை பூ பட்டை முதலியவற்றின் கசப்பு, கசப்பு. "வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்" (தொல். செய். 111). 3. வெறுப்பு. "வேம்புற்ற முந்நீர் விழுங்க" (சீவக. 513).

ம. வேம்பு, தெ. வேமு, க., து. பேவு (b)

வேம்பு-வேம்பன் = வேப்பமாலை யணிந்த பாண்டியன், "சினையலர் வேம்பன் றேரா னாகி" (சிலப், 16:149).

வேம்பா = வெந்நீர் சுடவைக்குங் கலம்.

வேங்கடம் (வேம்கடம்) = வேனிலில் வேகுங் காடாகிய பாலை நில

மலை.

வே-வேகு. வேகுதல் = 1. எரிதல். 2. புழுங்குதல். 3. உணவுப் பொருள் கொதிக்கின்ற நீரில் அல்லது எண்ணெயிற் பதமாதல்.

வேகு-வேகம் = 1. கடுமை. 2. காரம். மருந்து மிக வேகமாயிருக் கிறது.