உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

வேர்ச்சொற் கட்டுரைகள்

வெது-வெதும்பூ. வெதும்புதல் = 1. சுடவைத்த நீர் இளஞ்சூடாதல். 2. காய்ச்சல் தொடக்கத்தில் அல்லது நீக்கத்தில் உடம்பு சிறிது சுடுதல். 3. இலை மலர் முதலியன சிறிது வாடுதல். 4. வெம்மையாதல். "கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயின்" (சூளா. மந்திர. 26). 5. கொதித்தல். விழிநீர்க ளூற்றென வெதும்பி யூற்ற" தாயு. கருணாகர. 9). 6.மனம் நோதல். “வெதும்பி யுள்ளம்” (திருவாச. 5:1).

வெதும்பு -வெதுப்பு. வெதுப்புதல்

=

1. மெல்லச் சுடவைத்தல். 2.

நெருப்பில் வாட்டுதல். "தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன" (தாயு. சிவன்செயல். 5). 3. பழுக்கக் காய்ச்சுதல். "மீட்டும் வெதுப்பியதோர் செவ்வேல்” (தஞ்சைவா. 113).

வெதுப்பு-வெதுப்பம் = 1. இளஞ்சூடு. 2. வெப்பத்தாலுண்டாகும் வயிற்றுப் போக்கு (W).

வெது-வெதுக்கு. வெதுக்குதல் = வெதுப்புதல்.

வெதுக்கு-வெதுக்கல்-வெதுக்கலன் = சூட்டால் இளைத்தவன்.

வெய்து-வெஞ்சு-வெச்சு = வெம்மை. வெச்செனல் = 1. வெம்மைக் குறிப்பு. “தண்ணென்று வெச்சென்று" (குமர. பிர.மீனாட். பிள்ளைத். 1). 2. கடுமையாதற் குறிப்பு. “தம தீஞ்சொல் வெச்சென்றிடச் சொல்லி" (சீவக. 2015). வெச்செனவு = சூடு. "தண்ணெனவும் வெச்செனவுந் தந்து” (சேதுபு, கடவுள்.3)

வெச்சமுது (T.A.S.i...100).

=

சமைத்த உணவு. "வெச்சமுது மண்டபமும்"

வெச்சுவெந்நீர் = சுடுநீர் (யாழ். அக.)

=

வெச்சு-வெசு-வெசவு-வெசவி = வெப்பக் காலம்.

தெ. வேஸவி, க. பெசிகெ (besige).

வேது-வே. வேதல் = 1. எரிதல். “புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே" (நாலடி.186). 2. வெப்பமாதல். கடுங்கோடைக் காலத்தில் இரவும் பகலும் வேகும். 3. அழலுதல். 4. கொதிக்கின்ற நீரில் அல்லது எண்ணெயில் உணவுப்பொருள் பதமாதல். சோறு இன்னும் வேகவில்லை. 5. பொன் புடமிடப்படுதல். "வெந்தெரி பசும்பொன்" (சீவக. 585). 6. உடம்பு அல்லது உறுப்பு சுடப்படுதல். "வெந்த புண்ணில் வேலை நுழைத்தால் போல (பழ.).

வேபாக்கு = வேகுகை. "வேபாக் கறிந்து” (குறள். 1128)

வெந்தல் = கருகியது, மிகையாக வெந்தது.

வெந்தித்தல் = சூடாதல். வெந்திப்பு = கொதிப்பு.

வெந்தை = 1. வெந்தது. 2. நீராவியிற் புழுங்கியது."புளிப்பெய் தட்ட