உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள் (வெம்மை யொண்மை வெண்மை வெறுமைக் கருத்துவேர்)

=

131

இராமானுசநூற்.22). 4. காய்ச்சல் நாண் மீன் (சுரநட்சத்திரம்). “குருநின்ற நாட் கொன்ப தேழ்வெப் பென்பரே" (விதான. குணாகுண. 40). 5 துயரத்தாலுண்டாகும் உடல்வெப்பம். “வெப்புடை மெய்யுடை வீரன்" (கம்பரா. அயோமுகி. 2). 6. பொறாமை, மனப்புழுக்கம். 7. துயரம். 8.கொடுமை. "வெப்புடை யாடூஉச் செத்தனன் மன்யான்" (பதிற். 86:4). 9.தொழுநோய் (சிலப். உரைபெறுகட்டுரை, 1, உரை).

ம.. தெ. வெப்பு, து. பெப்பு (b).

99

வெப்பு-வெப்பம் = 1. சூடு. "நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே" (நாலடி. 68). 2. காய்ச்சல் நோய். "மீனவற்சுடு வெப்ப மொழித்து’ (திருவாலவா. 37:1). 3. பொறாமை. 4. ஒரு நரகம் (சி. போ. பா. 2:3, ப. 20). வெப்பு-வெப்பர் = 1. சூடு. "அணிமுலைத் தடத்தி னொற்றி வெப்பராற் றட்ப மாற்றி"(சீவக. 1746). 2. சூடான வுணவு, "புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர்....உண்ட பின்னை" (புறம். 269:4). 3. காய்ச்சல் நோய்.

ஒ.நோ: L. febris, E. fever.

=

வெப்பு-வெப்பல் 1. சாம்பல்நிறங் கலந்த செந்நிற முள்ள தும் கல்லின்றிக் கட்டிகட்டியாக வுள்ளதுமான நிலவகை (G. Tn. D. 1, 286). வெப்பு-வெப்பி. வெப்பித்தல் = சூடாக்குதல்.

வெள்-வெட்டை = வெப்பம். "அனல்வெட்டையாற் சுருண்டு" (இராமநா. உயுத். 14). 2. நிலக்கொதி (W.) தெ. வெட்ட, க. வெட்டெ.

வெட்டை-வெடை-வேடை = 1. வெப்பம். "வேடைய தெய்த வெதுப்பினும்” (திருவாரூ. 522). 2 மழையில்லா வறட்சிக் காலம். “கொடிய வேடைப் படலாற் சோர்ந்து" (இரகு. திருவவ. 29). 3. வேடைக்காலம்

வேடைக்காலம்

=

கோடைக்காலம் (W.) 2. வறட்சிக்காலம்.

வெள்-வெள்கை-வெட்கை-வெக்கை = 1. வெப்பம். "பூவில் வெக்கை தட்டும்" (ஈடு, 5:9:2), 2.புழுக்கம். 3. எரியும் நெருப்பினின்று வீசும் அனல். வெக்கை யடிக்கிறது (உ.வ.). 4. கணைச்சூடு.

ம. வெக்க, க. பெங்கெ (benke).

வெம்-வெவ்-வெவ்விது

1. சூடானது. 2. கொடியது.

“சினமிக்குவெவ்விதா யெழுந்து” (கலித். 102: 20, உரை).

வெவ்-வெவ்வர் = வெம்மை. "வெவ்வ ரோச்சம் பெருக (பதிற். 41:20). வெவ்வுயிர்த்தல் = வெய்துயிர்த்தல்.

வெய்து-வேது-வெது.

வெதுவெதுத்தல் = 1 இளஞ்சூடாயிருத்தல். 2. அரைகுறையாக வேதல். 3. சிறிது வாடுதல் (W.).

வெதுவெதுப்பு = இளஞ்சூடு.

"