உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

வேர்ச்சொற் கட்டுரைகள்

வெய்-வெய்யில் = வெயில். "நிழல் வெய்யில் சிறுமை பெருமை” திவ். (திருவாய். 6 : 3: 10).

வெய்யில்-வெயில் = 1. கதிரவனின் வெப்பவொளி. “என்பி லதனை வெயில் போலக் காயுமே” (குறள்.77.). 2. கதிரவ னொளி.

“துகில்விரித் தன்ன வெயிலவி ருருப்பின்” (நற். 43). 3. கதிரவன். "வெயிலிள நிலவேபோல் விரிகதிரிடை” (கம்பரா. வனம்புகு. 2). 4. ஒளி. "மணியிழையின் வெயில்" (கம்பரா. நாட். 42).

ம. வெயில், க. பிசில் (b).

வெய்யது-வெய்து= (பெ.) 1. வெப்பமானது. "சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி” (அகம். 203). 2. வெப்பம். (மதுரைக் 403, உரை). 3 வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம். 4. துயரம். "வெய்துறு பெரும் பயம்”

((6560TIT. 35:3).

ஞானா.

(கு. வி. எ.) 1. வெப்பமாக. வெய் துயிர்த்தல் = வெப்பமாக மூச்சு விடுதல். "வெய்துயிர்த்துப் பிறைநுதல் வியர்ப்ப” (அகம். 207).

வெய்து-வேது.

வெய்து பிடித்தல்-வேது பிடித்தல் = 1. ஒற்றடங் கொடுத்தல். 2. ஆவிபுகை முதலியவற்றால் உடம்பை வெம்மை செய்தல். 3. நீராவியால் உடம்பை வேர்க்கச்செய்தல். (வேது குளித்தல்). வேது-வேதை “ஏதையா விந்த வேதை" (இராமநா. கிஷ்.14)

வெள்-வெய்-வெய்ம்மை-வெம்மை.

=

துன்பம்.

வெம்மை = 1. வெப்பம். "அழலன்ன வெம்மையால்" (கலித்.11). 2. கடுமை. 3. வல்லமை. "உலக மூன்றுமென் வெம்மையி னாண்டது" (கம்பரா. அதிகா. 4).

ம. வெம்ம, தெ. உம்ம.

வெம் = 1. வெப்பமான வெம்பகல். 2. கடுமையான. வெஞ்சொல்.

வெம்-வெம்பு. வெம்புதல் = 1. மிகச் சூடாதல் "மலைவெம்ப" (கலித். 13). 2. வாடுதல். "வேரோடு மரம்வெம்ப" (கலித். 10:10:4). 3 . வெப்பத்தாற் பிஞ்சிற் பழுத்தல். 4. கடுமையாதல். "வெம்பின செருவின் வந்து” (கம்பரா. நிகும். 96). 5. மனம் புழுங்குதல். "வெம்பினா ரரக்க ரெல்லாம்” (தேவா. 776:2).

வெம்பு-வெம்பல் = 1. மிகுவெப்பம். "வெயில்வீற் றிருந்த வெம்பலை யருஞ்சுரம்” (நற். 84). 2. வாடல். 3. வாடினது. 4. வெப்பத்தாற் பிஞ்சிற் பழுத்த

காய்.

=

வெம்பு- வெப்பு 1. சூடு. 2. காய்ச்சல் நோய். "மேய வெப்பிடர் மீனவன்மே லொழிந்ததுவும்" (பெரியபு. திருஞான. 1050). 3. காய்ச்சல் தெய்வம் (சுரதேவதை). "மோடியும் வெப்பும் முதுகிட்டு" (திவ்.