உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள்' (வெம்மை யொண்மை வெண்மை வெறுமைக் கருத்துவேர்) 129 விள்--1. வெம்மைக் கருத்து

விள்-விளர்-வியர். வியர்த்தல்

=

1. வெப்பத்தால் உடலின்

மேற்புறத்தில் நீர்த்துளி தோன்றுதல். "முயங்க யான் வியர்த்தன னென்றனள்” (குறுந். 84).2. பொறாமையால் மனம் புழுங்குதல். "வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ" (தொல். மெய்ப். 12).

வியர் = வெப்பத்தால் தோன்றும் வியர்வைத் துளி. "குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள்” (மணிமே. 18:40).2. இளைப்பு. “பந்தெறிந்த வியர்விட... கூ... ஆடுபவே" (கலித். 40).

வியர்ப்பு = வியர்வை. வெய்துண்ட வியர்ப்பல்லது” (புறம்.387). வியர்வு-வியர்வை, வியர்வைக் கட்டி = கோடையில் வியர்வையா லுண்டாகும் புண்கட்டி.

66

வியர்-வெயர். வெயர்த்தல் = வேர்வையுண்டாதல். "புனைநுதல் வெயர்க்க" (பாரத. பன்னிரண். 47).

க. பெமர் (b), து. பெகரு (begaru).

வெயர் = வேர்வை நீர். வெயர்ப்பு = வேர்வை நீர், "குறுவெயர்ப் பொழுக்கென" (கல்லா. 16:5).

வெயர்- வெயர்வு. வெயர்- வெயர்வை.

வெயர்-வேர். வேர்த்தல் = வேர்வை கொள்ளுதல். "வேர்த்து வெகுளார் விழுமியோர்” (நாலடி. 64).

க. பேமெர் (b).

வேர்-வேர்வை. "வேரொடு களைந்து” (பொருந. 80).

வேர்-வேர்பு. (சங்.அக.). வேர்-வேர்ப்பு.

வேர்-வேர்வு. “தென்றல் வந்தெனையன் திருமுகத்தின் வேர் வகற்ற”

(கூளப்ப. 99).

வேர்-வேர்வை.

வெள்-வெய்-வெய்ய = வெப்பமான "வெய்ய கதிரோன் விளக்காக (திவ். இயற். 1:1). 2. கொடிய.

66

வெய்-வெய்யன்

=

95

1. தீத்தெய்வம். 2, கதிரவன். 3. கொடியவன்.

'வெய்யனா யுலகேழுட னலிந்தவன்” (திவ். பெரியதி. 5:3:3).

வெய்-வெய்யவன் = 1. தீத்தெய்வம். "வெய்யவன் படையை விட்டான்" (கம்பரா. அதிகாய. 203). 2. கதிரவன். “வெய்யவ னூருந் தேரின்” (பெருங். இலாவாண. 8: 173). 3. கொடியவன்.

வெய்யோன் = 1. தீத்தெய்வம். 2. கதிரவன். "வெய்யோனொளி " (கம்பரா. கங்கை.1) 3. கொடியவன். “ஆர்த்தனர் வெய்யோர்" (கந்தபு. முதனாட்போ. 49)