உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள்' ( வெம்மை யொண்மை வெண்மை

வெறுமைக் கருத்து வேர்)

கதிரவன், திங்கள், தீ என்னும் மூன்றும், ஒளி தருவதால் முச்சுடர் எனப்படும். இவற்றுள் முதலதே ஏனை யிரண்டற்கும் மூலம்.

உலகம் முழுமைக்கும் பகலில் ஒளிதரும் கதிரவனும், இருண்ட இடமெல்லாம் மக்கட்கு ஒளிதரும் விளக்கும், பூதவகையில் தீயெனும் ஒன்றே. அதன் சிறப்பியல்பு வெம்மை. அதன் விளைவு ஒண்மை அல்லது ஒளிர்வு.

தீ பொதுநிலையிற் சிவந்தே தோன்றுவதால், வெம்மைக் கருத்திற் செம்மைக் கருத்துத் தோன்றிற்று. எ-டு: எரிமலர் = செந்தாமரை, முருக்கு (முண்முருங்கை) மலர்.

கதிரவன் எழுகை மறைகை வேளைகளிற் சிவந்தும் உச்சி வேளையில் வெளுத்தும் தோன்றினும், அதன் வெம்மை மிகுதியாற் செங்கதிர், செஞ்சுடர், செய்யவன் எனவே படும். ஆயின், இரவனான திங்களோ, எக்காலும் வெண்ணிறமாகவே யிருப்பதால், வெண்கதிர், வெண்சுடர் எனப்படுவதொடு, வெண்டிங்கள், வெண்ணிலா, வெண்மதி யெனவும் அடைபெறும். இதனால், ஒண்மைக் கருத்தினின்று வெண்மைக் கருத்துத் தோன்றிற்று.

வெள்ளாடையும் வெண்சுவரும் வெறுமையாகத் தோன்றுவதால், வெண்மைக் கருத்தில் வெறுமைக் கருத்துப் பிறந்தது.

சினக்கருத்து வெம்மைக் கருத்தினின்றும், தூய்மைக் கருத்தும் அறிவின்மைக் கருத்தும் வெண்மைக் கருத்தினின்றும், வறுமைக் கருத்து வெறுமைக் கருத்தினின்றும் தோன்றும் கிளைக் கருத்துகளாகும்.

விள் என்னும் வெம்மைக் கருத்து வேர்ச்சொல், முல் என்னும் மகரமுதல் வேர்ச்சொல்லினின்று திரிந்ததாகும்.

முல்-முன்-மின்-மின்னல்-மின்னலி.

முல்-முள்-முளி. முளிதல் = காய்தல், எரிதல், வேதல். முளி-IO-Iளிர். மிளிர்தல் = ஒளிர்தல், விளங்குதல். முள்-விள்.