உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




35).7.

விள்' (வெம்மை யொண்மை வெண்மை வெறுமைக் கருத்துவேர்) 139 (சுக்கிரன்). "இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்" (புறம். 35). 7. வெள்ளிக்கிழமை. "வெள்ளி வாரத்து” சிலப். 23:135). 8. கம்பராமாயணம் பெரியபுராணம் முதலிய பழம் பனுவல்களில் தம் சொந்தப் பாட்டுகளை இடைச்செருகிய தருமபுர மடத் தம்பிரான். இது வெள்ளி பாடல் (உ.வ.). 9.வெள்வரை. "வெறுநாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக் கோலால் அடிபட்டு வரும்” (பழ.). 10, விந்து, "வெள்ளி யுருகியே பொன்வழி யோடாமே" (திருமந். 834).

=

வெள் வெளி வெளில் = முதுகில் வெண்கோடுள்ள அணில். "வெளிலாடுங் கழைவளர் நனந்தலை" (அகம்.109).

வெளி-வெளிச்சி=வெண்ணிறக் கொண்டைமீன். வெளிச்சி-வெளிச்சை. "வெளிச்சை மீறும்" (அழகர்கல. 86). வெளி-வெளிர்-வெளிறு. வெளிறுதல் = 1. வெண்மையாதல். 2.சற்றே வெளுத்தல்

வெளிறு = வெண்மை "வெளிறுசேர் நிணம்" (கம்பரா. கரன். 155).

வெள்-வெளு. வெளுத்தல் = (செ.கு.வி.) 1. வெண்மையாதல்.2. சாயம் போதல். அந்தப் புடவை வெளுத்து விட்டது (உ.வ.). 3.விடியுமுன் கிழக்கில் வானம் இருள் நீங்குதல். கிழக்கு வெளுத்துவிட்டது (2.01.). 4. முகக்களை கெடுதல்.

(செ.குன்றாவி.) 1. ஆடை யொலித்துப் பெரும்பாலும் வெண்ணிற மாக்குதல். 2. ஆடையொலித்தல்போற் புடைத்தல். 3. எதிரியைத் தோற் கடித்தல் (கொ. வ.). 4. திறம்படச் சொற்பொழிவாற்றுதல் அல்லது வினைசெய்தல் (கொ.வ.).

=

வெளு-வெளுப்பு 1. வெண்மை. 2. நோயால் உடல் வெளிறுகை. 3. ஆடை தப்புகை. 4. புடைக்கை.

வெளுப்பு-வெளுப்பம் = வெண்மையாகை, வெளிறுகை.

வெள்-வெளுவை = வெண்மையாகை (யாழ். அக.).

வெள்-வெளேல் - வெளேர்.

வெளேரெனல் = வெண்மையாதற் குறிப்பு.

வெள்-வெள்ளை =1. வெண்மை. "வெள்ளை வெள்யாட்டுச் செச்சை” (புறநா. 286). 2. வெள்ளாடை. 3. வெளுப்பு, சலவை. "கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப் பெண்ணுக்கு ஒரு பிள்ளை" (பழ.) 4. சுண்ணாம்பு. வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும். "வேண்டாதவனிடத் திலும் வெள்ளை வாங்கலாம்" (பழ.). 5. சுண்ணாம்பு பால் மோர் என்னும் மூவெண் பண்டங்கள். 6. வெள்ளிக்காசு. "வெள்ளை வெள்ளை யென்பார்கள் மேதினியோர்" (பணவிடு. 341). 7. வெள்ளீயம் (W.). 8. வயிரம். இது நல்ல வெள்ளை. 9. பச்சைக்கற் குற்றம் எட்டனுள் ஒன்று (சிலப். 14:184, உரை.) 10.