உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

வேர்ச்சொற் கட்டுரைகள்

சங்கு (ஈடு, 6:1:5 அரும்.). 11. வெள்ளைமாடு." "பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளை' (கலித். 104). 12. வெள்ளையாடு. 13. வெள்ளாட்டினமான காராடு, செவ்வாடு. "துருவை வெள்ளையொடு விரைஇ" (மலைபடு. 414). 14. பலராமன். “மேழி வலனுயர்த்த வெள்ளை" (சிலப். 14:9), 15. வெண்ணெல். 16. சம்பா நெல்வகை (G. Tu. D. 153). 16. பனங்கள் (பிங்.). 17. விந்து. 18.வெட்டைநோய். 19. வெள்ளைக் கனிய நஞ்சு (மூ. அக). 20. வெண்முகில் "வெள்ளை மழையென்றே விளம்பு" (சினேந் 4:21). 21. வெள்ளைக்கொடி, வெள்ளை காட்டுதல் (உ.வ.). 22. வெண்புள்ளி. ஐந்துகிரிலும் வெள்ளை போட்டிருக்கிறது (உ.வ.). 23. வெளிப்படை, தெளிவு. இந்தப் பாட்டு பாட்டின் பொருள்) வெள்ளை (உ.வ.).

ம., தெ. வெள்ள.

வெள்ளைக்காரன் = வெள்ளை நிறத்தான், மேனாட்டான்.

வெள்ளொக்கல்

=

நன்றாக வுண்டு

வெண்ணிறமாகவும் உள்ள உறவினர்.

செழிப்பாகவும்

வெள் - வெள்கு வெள்குதல் = 1. முகம் வெளிறுதல், நாணமடைதல். "வெள்கிட மகுடஞ் சாய்க்கும்" (கம்பரா. வாலிவதை. 73). 2. கூச்சப்படுதல். "தான்றன் வென்றியை யுரைப்ப வெள்கி" (கம்பரா. திருவடி.9). 3. அஞ்சுதல். "வெந்தனகள் கொண்டெறிய வெள்கிம் மயிர்க் கவரிமா விரியுமே" (சீவக. 1897). 4. மனங்குலைதல் (பிங்.).

க. பெள்கு.

வெள்கு-வெட்கு. வெட்குதல் = 1. நாணுதல். 2. கூச்சப்படுதல். 3. அஞ்சுதல் (W.).

வெட்கு-வெட்கம் = 1. மானக்கேடு (சூடா.). "வெட்கத்துக் காளினி நானோ" (இராமா. யுத்த. 32). 2. கூச்சம்.

வெள் - வேள் - வேளம் - வேழம் = 1. வெண்கரும்பு. 2. பேய்க் கரும்பு 3. நாணல். 4. கொறுக்காந்தட்டை. 5. வெள்யானை, யானை.

தூய்மைக் கருத்து

இது வெண்மையினின்று

தோன்றிய

கிளைக்கருத்தாகும்.

கருமையைக் குறிக்கும் களங்கம் கரிசு கன்ற முதலிய சொற்கள் குற்றத்தை யுணர்த்துவது போன்று, கருமைக் கெதிரான வெண்மையைக் குறிக்குஞ் சொல் குற்ற மின்மையை அல்லது தூய்மையை உணர்த்திற்று.

வெள்ளம் = உண்மை. இது கள்ளமா வெள்ளமா? (W.).

வெள்ளர் = கரவற்றவர். “கள்ளரோ புகுந்தீ ரென்ன.... வெள்ளரோ

மென்று நின்றார் (தேவா. 1190 :9).

வெள்ளந்தி = கள்ளங் கரவற்ற தன்மை, அத்தன்மையன்.