உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

வேர்ச்சொற் கட்டுரைகள்

ழகரம் ககரமாகத் திரிவது இயல்பாதலால், E.wake, L.vigil என்னும் மேலையாரியச் சொற்களும் விழி என்னும் தென்சொல்லொடு தொடர் புடையனவா யிருக்கலாம்.

விள் - விர் - விரி. விரிதல் = 1. பிளத்தல். அந்தச் சுவர் விரிந்து விட்டது (உ.வ.). 2. அவிழ்தல், "விரிந்துவீழ் கூந்தல் பாரார்" (கம்பரா. உலாவியற். 4). 3. மலர்தல், மணத்துடன் விரிந்த கைதை. (கல்லா. 2). 4. அறுவகைச் சொற்றொடர்களில் வேற்றுமையுருபு முதலியன தொகாது வெளிப்பட வருதல். 5. பரத்தல். “விரிமுக விசும்பு" (சீவக.329). 6. முற்றுதல்.

66

ம. விரியுக, தெ. விரியு. க. பிரி (b).

99

விரித்தல் = 1. குடை, மடித்த ஆடை, சுருட்டிய படம் முதலிய வற்றை விரியச் செய்தல். "கம்பளரத்தினம் இருக்க ரத்தினக்கம்பளம் விரிக்க” (பழ.). 2. முடித்த கூந்தலை அவிழ்த்து நெகிழவிடுதல். “விரித்த கருங்குழலும்” (சிலப். 20. வெண்பா 3). 3. பரப்புதல். "பல்கதிர் விரித்தே" (புறம்.8). வான்கோழி...தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே (மூதுரை, 14). 4. ஒரு சொல்லிடை ஓர் எழுத்தை மிகுத்தல். "விரிக்கும்வழி விரித்தலும்” (தொல். எச்ச. 7). 5. சுருக்கிக் கூறியதைப் பெருக்கிக் கூறுதல். "தொகுத்தல் விரித்தல்" (தொல். மரபு. 98). 6. விளக்கிச் சொல்லுதல். “நூல்விரித்துக் காட்டினும்” (நாலடி. 34).

விரி -1. விரித்தல். "தொகைவகை விரியிற் றருகென" (நன். சிறப்புப்.) 2. விரிப்பு. 3. பொதிமாட்டின் மேலிடும். மெத்தைப்பை. 4. திரை விரியை யவிழ்த்துவிடு. 5. விரிந்த அளவு. “சார்பெழுத் துறுவிரி” (நன். 60). 6. பரப்பு.

விரிசல் = 1. பிளவு. 2. அலை. சலங்கு விரிசலில் அகப்பட்டது (W). 3.தென்னோலைத் தட்டிவகை (தஞ்).

விரிப்பு = 1. பிளப்பு (W.). 2. விரிக்கை. 3. விரிக்கும் கம்பளம் முதலியன 4. மலர்த்துகை.

விரியல் = 1. மலர்ச்சி. “தாழை விரியல் வெண்டோட்டுக் கோதை” (சிலப். 2 : 17). 2. பூமாலை. "விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டி” (சிலப். 10:133). 3. ஒளி (சூடா). 4. பரப்பு (பிங்.). 5. தென்னோலைத் தட்டி.

விரியல்-விரியலை.

விரிவு = 1. பிளவு. சுவர் விரிவு கண்டிருக்கிறது (உ.வ). 2. பரப்பு. விரிவுரை = 1. நூலின் விரிவான வுரை (விருத்தியுரை).2. சொற் பொழிவு (இக்கா).

விரிவுரையாளர் = பேராசிரியர்க்குக் கீழ்ப்பட்ட ஆசிரியர் (Lecturer). (இக்கா)

=

விர் - விரு = நிலவெடிப்பு. விரு - விருவு.