உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள் (பிளவுக் கருத்துவேர்)

147

வியாழத்தின் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள்" (அறப். சத. 69).

வியாழம்-வியாழன்.

கோள்களுள் வியாழன் பெரிதாயிருப்பதும், வடமொழியில் அது பிருகஸ்பதி என்று பெயர் பெற்றிருப்பதும், கவனிக்கத் தக்கன.

பொன் என்பது வியாழனுக்கொரு பெயராதலால், வியல் என்னுஞ் சொல்லிற்குப் பொன்னென்னும் பொருளும் தோன்றிற்றுப் போலும்! வியல்-வியன் = 1. அகலம் (W.) 2.பெருமை (திவா.). 3. சிறப்பு. (ஈடு, 8: 10 : 1) 4. வியப்பு (ஈடு, 8: 10).

வியன் = (கு. பெ. எ.) அகன்ற, பரந்த

வியனிடை= பரந்த வெளி, விசும்பு, வானம். 'வியனிடை முழுவதுகெட" (தேவா.833:7).

வியலகம், வியலிடம் என்பன பரந்த ஞாலத்தைக் குறித்தாற் போன்று, வியனிடை என்பது பரந்த வெளியாகிய வானத்தைக் குறித்தது இடைவெளி.

66

விடுதல்= (செ.கு.வி). 1. பிளத்தல். வெடியதிர்ச்சியில் சுவர் விட்டுப்போயிற்று (உ.வ.) 2. விள்ளுதல், திறத்தல் (இலக். அக.). 3. கட்டவிழ்தல் "தளைவிட்ட தாமரை" (கலித். 77). 4. மலர்தல். "தாதுபொதி போதுவிட' (தேவா. 1157: 6), 5. பிரிதல், குலைதல், தளர்தல். கட்டு விட்டு விட்டது. (உ.வ.) 6. நீங்குதல், சட்டி சுட்டது; கைவிட்டது. “விட்டது ஆசை விளாம்பழத் தோட்டோடே" (பழ.) 7. தவிர்தல். மழைவிட்டும் தூவானம் விடவில்லை (உ.வ.). "அந்திமழை அழுதாலும் விடாது” (பழ.). 10. விலகுதல். மூட்டு விட்டுப்போயிற்று. (உ.வ.) 11. தங்குதல். “காவினு ணயந்து விட்டார்களே" (சீவக. 1905). 12. வெளிவருதல். ஓர் இலக்கு விட்டிருக்கிறது (உ.வ.).

(செ. குன்றாவி.) 1. பிதிர் விள்ளுதல். ஒரு விடுகதை போடு. 2. வெளிப்படுத்துதல். மனத்திலிருக்கிறதை விட்டுச் சொல். 3. சொல்லுதல். "வேலை கடப்பன் மீள மிடுக்கின்றென விட்டான்" (கம்பரா. மகேந்திர. 4). 4. பிடி நெகிழச் செய்தல். பணப்பையை எங்கேயோ விட்டுவிட்டான் (உ.வ.). 5. இடத்தினின்று நீங்குதல். ஊரை விட்டுவிட்டான் (விரும்பி நீங்குதல்), கோட்டையை விட்டுவிட்டான் (அஞ்சி நீங்குதல்), பெட்டியை விடுதியில் விட்டுவிட்டான் (ஒன்றை மறந்து நீங்குதல்). 6. விலகுதல். அவன் சென்ற ஆண்டே பள்ளியை விட்டுவிட்டான் (உ.வ.) 7. நீக்குதல் சம்பளம் போதாதென்று. வேலையை விட்டுவிட்டான். 8. கைவிடுதல். அவன் புது மணஞ் செய்தவுடன் பழைய மனைவியை விட்டுவிட்டான். 9. நிறுத்துதல். வண்டியை விட்ட இடத்திலிருந்து ஓட்டிவந்தான். 10. விடுதலை செய்தல்.