உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

வேர்ச்சொற் கட்டுரைகள்

அரசரின் முடிசூட்டு விழாவன்று சிறை யாளியரை யெல்லாம் விட்டுவிட்டனர். 11. விடுமுறையளித்தல். வேனிற்காலத்திற் கல்வி நிலையங்கட்கெல்லாம் விடுமுறை விடப்படும். 12. இசைதல். காசு கொடுத்தபின் ஏவலன் உள்ளே போகவிட்டான். 13. பிறருக்காக இழத்தல். பொதுநலத்திற்காகத் தன்னலத்தைவிட்டுக்கொடுத்தல் வேண்டும். 14.அனுப்புதல். "தவமுது மகளை விட்டு” (குறள். 501, உரை). 15. ஏவுதல். நாயைவிட்டுக் கடிக்கச் செய்தான். 16. செலுத்துதல், எய்தல் “எம்மம்பு கடிவிடுதும்” (புறம்.9). 17. அடித்தல். கன்னத்தில் விட்டான் இரண்டு. 18.வினைக் கமர்த்தல். தண்ணீருக்கென்று நாலாளை விட்டிருக்கிறார்கள். “காடுகெட ஆடுவிடு" (பழ.). 19 அமைத்தல். வீட்டிற்கு நாற்புறமும் வாசல் விட்டுக் கட்டியிருக்கின்றனர். 20. ஒளி வீசுதல். பட்டைதீர்ந்த கல் நன்றாய் ஒளிவிடும். 21. புகுத்துதல். பாம்புப்புற்றிற்குள் கையை விட்டான். 22. இடை யில் ஏடு தள்ளுதல். கள்ளேடு விட்டுப் படிக்கிறான். 23. இடையில் இடம்விடுதல். ஒற்றை யிடைவிட்டுத் தட்டச்சடித்தல் வேண்டும். 24. பொறுத் தல். கீரையை வளரவிட்டு அறுத்தல் வேண்டும், கொதிக்கின்ற நீரை ஆறவிட்டுக் குடித்தல் வேண்டும். 25.ஒழித்தல். குடியை விட்டுவிடு. 26.ஒதுக்குதல். புதிய நகரமைப்பிற் கல்விச்சாலைக்குப் போதிய நிலம் விடப்பட்டிருக்கிறது. 27. இடுதல். பாலிற் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொடுத்தான். 28. கொடுத்தல். விடுதீட்டு = தானப் பட்டயம்.

வினை முடிவுணர்த்தும் துணைவினை: எழுதிவிட்டான்.

க. பிடு(b), வ. பித் (bhid).

விடுத்தல் = (செ. குன்றாவி.) 1. நெகிழ்த்தல். 2. பிரித்தல். “புரைவிடுத் துரைமோ' (சீவக. 1732).

66

'உன்னல் காலே ஊன்றல் அரையே

முறுக்கல் முக்கால் விடுத்த லோன்றே.

3. பிதிர் விள்ளுதல். 4. வெளிவிடுதல். "பெருங்காற்று விடுத்த" (கல்லா. கணபதி.). 5. சொல்லுதல். "செல்கென விடுத்தன்று" (பு. வெ. 12:19). 6. விடைதருதல். “வினாயவை விடுத்தல்" (நன்.40.) 7. பற்று விடுவித்தல். "பூவலர் கொடியனாரை விடுக்கிய கோயில் புக்கான்" (சீவக. 2917) 8. அனுப்புதல். “போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்” (தொல். அகத். 39). 7. எய்தல். “ஓருட லிரண்டு கூறுபட விடுத்....வேலோய்" (கல்லா. முருகன்றுதி.) 10. போகவிடுதல். "உயிர் விடுத்தலின்" (கல்லா. கணபதி).

(செ.கு.

வி.) 1. விட்டுச் செல்லுதல். "விடுத்தேன் வாழிய குருசில் (புறம். 210).2. தங்குதல். "விடுத்தான் விடுத்தற் கிடங்கூறி" (திருவாலவா. 54:5). விடு-விடர் = 1. நிலப்பிளப்பு. "கூரெரி விடர்முகை யடுக்கம் பாய்தலின் (அகம். 47:6). 2. மலைப்பிளப்பு. “நெடுவரை யருவிடர்”

66