உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள்' (பிளவுக் கருத்துவேர்)

149

(புறம்.135). 3. மலைக்குகை. “பெருமலை விடரகத்து" (புறம். 37). 4. முனிவ ரிருப்பிடம் (சூடா.)

விடர்-விடர்வு = நிலப்பிளப்பு.

விடர்-விடரகம் = 1. மலைக்குகை. “விடரக முகந்து” (மதுரைக். 308). 2. மலை. “விடரக நீயொன்று பாடித்தை” (கலித். 40). 3. பூனை (பகலிற் கண் பிளவுள்ளது).

விடர்-விடரவன் = (பகலிற் கண்பிளவுள்ள) பூனை (யாழ். அக.) விடர்-விடரளை = மலைப் பிளப்பிடம். "நறும்பழ மிருங்கல் விடரளை வீழ்ந்தென" (ஐங். 214).

விடரகம்-விடருகம் (நாமதீப) பூனை.

விடருகம்-விடரூகம்.

விடரகம்-விடாரகம் (பூனை)-வ. விடாரக.

விடாரகம் விடாலகம்

= பூனை (சூடா.).

விடாலகம்-விடாலம் = பூனை (சங். அக.).

விடாலம்-வ. வைடால் = பூனை.

விடாலம்-விடாரம் = பூனை. விடாரம்-வ. வைடூர்ய

போன்ற ஒளிக்கல், பூனைக்கண்; cat's eye. an opalescent gem.

=

பூனைக்கண்

மாக்கசு முல்லர் (Max Muller) எழுதிய `India, What can it teach us?' என்னும் பொத்தகத்தின் இறுதியிலுள்ள 'On the name of the cat and the cat 's eye' என்னும் குறிப்புரையைப் பார்க்க. (பக். 261-270)

விடு-விடுத்தம்

=

தடவை. “எங்களூரையும் இரண்டு விடுத்தமாக

அழித்து ஆளும்படி வெட்டி”(புதுக். கல். 799).

விடுத்து விடுத்து = அடிக்கடி (W.)

விடு-விடுதி = தங்குமிடம். "விடுதியே நடக்கவென்று நவிலுவீர்" (பாரத. சூது. 165). 2. விடுநிலம். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட நிலம். 3. தனித்த

வன்-வள்-து. விடுதியாள், விடுதிமாடு, விடுதிப்பூ 4

உத்தரவு. எனக்கு விடுதி தரவேண்டும்.

ம. விடுதி, தெ. விட்டி (viddi), க. பிடதி (b).

விடு-விடுப்பு = 1. நீக்கம். "விடுப்பில் குணகுணி" (வேதா.சூ.127). 2. துருவியறியுந் தன்மை (W.). 3. வேடிக்கையானது (W.). அவன் விடுப்புக் காட்டுகிறான். 4. விருப்பம் (யாழ். அக.). 5. விடுமுறை.

விடு-விடை = 1. விடுத்தல், அனுப்புதல். 2. வெளிப்படுத்துதல். 3. வேறுபடுத்துதல். "விடைப்பருந் தானை வேந்தன்" (சீவக. 555). 4. துமுக்கிக் குண்டு (தோட்டா) (புதுவை). 5. மறுமொழி, உத்தரம். 6. இசைவு, இசைமதி