உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

வேர்ச்சொற் கட்டுரைகள்

(அனுமதி). “கானமின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன்" (கம்பரா. கைகேசி. 110).

விடையிலதிகாரி = அரசன் கட்டளையை உரியவர்க்கு விடுக்கும் அதிகாரி. “விடையிலதிகாரிகள் உய்யக் கொண்டானும்” (S.I.I.III, 36).

விடு-வீடு = 1. விடுகை. "நட்டபின் வீடில்லை" (குறள். 791). 2. விடு தலை “நெடுங்கை விலங்கின் வீடுபெறல் யாதென" (பெருங். நரவாண. 3:107). 3. வினைநீக்கம். "வீடெ னப்படும் வினைவிடுதல்" (சீவக. 2846). 4. வீடு பேறு, வீட்டுலகம் “வீடுடை யானிடை” (திவ். திருவாய். 1: 2: 1). 5. முடிவு (பிங்.). 6. அழிவு. "நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடுபேறு” (திவ். திருவாய். 8:10:6), 7. தங்கும் இடம், மனை. “வீடறக் கவர்ந்த” (பு.வெ. 3:15, கொளு). 8. ஓரையிடம். 9. சூதரங்கிற் காயிருக்கு மிடம்.

பிதிர் விள்கை அல்லது மறை வெளிப்படுகை

விடு-விடுக்கை, விடுப்பு = விடுகதை யழிப்பு. விடுகதை = விடுக்குங் கதை.

விடு-விடுவி. விடுவித்தல் = விடுகதை யழித்தல்.

விள்-விடு-விடுச்சி-விடிச்சி-விரிச்சி

=

தெய்வக்குறி (oracle) “படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி” (தொல். புறத். 3). 2. வாய்ப்புள், தன் னேர்ச்சியான நற்சொல்.

விரிச்சி நிற்றல் = நற்சொல் கேட்க விரும்பி நிற்றல். "பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லைப். 11) விரிச்சியோர்த்தல் = நற்சொல் கேட்டு நிற்றல். "நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கும்" (புறம். 280) விரிச்சி-விரிச்சிகன் = குறிகூறுவோன். “விசும்பிவர் கடவுளொப் பான் விரிச்சிக னறிந்து கூற” (சீவக. 621).

போருக்குச் செல்லுமுன் தெய்வக் குறி கேட்பது பண்டைப் படைமறவர் வழக்கம்.

விரிச்சி என்னும் தென்சொல்லிற்கும் வினாவைக் குறிக்கும் ப்ரச் என்னும் வடசொல்லிற்கும், யாதொரு தொடர்புமில்லை. தெய்வக்குறி அல்லது வாய்ப்புள், மறைவெளிப்பாடாதலால் விரிச்சியெனப்பட்டது. வெடித்தல்

விள்-விடு-வெடி, வெடித்தல் = 1. பிளத்தல். நிலம் வெடித்திருக்கிறது. "வெடிக்கின்ற யிப்பியு ணித்திலம்" (தஞ்சைவா. 232.) 2. ஓசையெழப் பிளத்தல். 3. அதிர்வேட்டு முதலியன எழுதல். 4. வெடியோசை யுண்டாதல். "வெடித்த வேலை" (கம்பரா. இலங்கையெரி. 10). 5. காய்பிளந்து பஞ்சு அல்லது கொட்டை வெளிப்படுதல். பருத்தி நன்றாய் வெடித்திருக்கிறது, ஆமணக்கு முத்தெல்லாம் வெடித்துவிட்டன. 6. மலர்தல், "வெடித்தபோ