உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள் (பிளவுக் கருத்துவேர்)

151

47). 7.

தெல்லாம்... கொய்தான்" (செவ்வந்திப்பு. உறையுயூரழி. வெளிக்கிளம்புதல். இந்தச் செடியில் மூன்றிலை வெடித்திருக்கின்றன. 8 விறைத்து மேலே கிளம்புதல். “வெடித்தவாற் சிறுகன்று” (அரிச். 4. விவாக. 267.). 9. பொறாமையால் துடித்தல். (ஐந். ஐம். 36).

வெடி= 1. பிளவு. "வெடியோடும் வெங்கானம்" 2. வேட்டு. 3. இடி (சூடா.) 4. வெடிவாணம். 5. துமுக்கி (துப்பாக்கி). 6. பேரோசை. "மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிர” (குறிஞ்சிப், 161) 7. பகை கிளர்கை. "வெடிபடு போர்த்தொழில் காண்" (சீவக. 776.) 8. கேடு. "வெடிப்படக் கடந்து” (மதுரைக். 233). 9.அச்சம் (பிங்.)10 வெடியுப்பு (சங். அக.).11. நிமிர்ந் தெழுகை."வெடிவேய் கொள்வது போல" (புறம். 302). 12. தாவுகை, குதிக்கை. "வெடிபோன பருவ வாளை” (அரிச். பு. விவாக. 218). 13. திடுமென்றெழும் புகை அல்லது மணம். 14. தீய நாற்றம். “வெடிதரு தலையினர்" (தேவா. 912:6.). 15. திடும் பொய் (நாஞ்.). விள்-வெள்-வேள்-வேட்டு வெடி. "தப்பட்டை யொலிவல்

வேட்டு” (அறப்.சத. 63).

=

வெள்-வெளி- வெளிச்சி = காதிற்குள் வெடிக்குங் கட்டி.

வெளிச்சி-விழிச்சி. (M.L.)

வெடி-வெடில் = 1. வேட்டு. 2. தீயநாற்றம். வெடிலுப்பு = வெடியுப்பு.

வெட்டுதல்

=

விள்-வெள்-வெட்டு வெட்டுதல் 1. ஓசைபட ஒரே அறையில் வாளால் அல்லது கத்தியாற் பிளத்தல். "அரியன்றலை வெட்டி வட்டாடினார்" (369:2). 2. எழுத்து, சின்னம் முதலியன பொறித்தல். கல் வெட்டு, கலத்திற் பெயர்வெட்ட வேண்டும். 3. தோண்டுதல். "கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது." (பழ.) 4. துணி முதலியன துண்டித்தல். தையற்காரன் துணியை வெட்டித் தைப்பான். 5. தலைமயிரைக் கத்தரித்தல், முடிவெட்டகம், 6. கூல அளவில் தலைவழித்தல். 7. புழுவரித்தல். "இருப்பது இருமயிர்; அதில் ஒன்று புழுவெட்டு" (பழ.). 8. சூதாட்டத்தில் எதிரியை வென்று ஆட்டக்காயை அல்லது சீட்டை நீக்குதல். வெட்டாட்டம் ஆடவேண்டும். 9. மறுத்துரைத்தல். ஒட்டிப் பேச வேண்டுமா, வெட்டிப்பேச வேண்டுமா? 10. கடுமையாகப் பேசுதல். "வெட்டிய மொழியினன்" (கம்பரா. குகப்.9.) 11. உறுப்பை நீக்குதல். தலைவெட்டிக் கருவாடு. 12. அழித்தல்.

வெட்டுவான் = பாக்கு வெட்டி.

தலைவெட்டி

அள்.

வெட்டு-வெட்டி= வெட்டுபவன்-பவள் வது. காடுவெட்டி, விறகு வெட்டி, மண் வெட்டி,

வெட்டறுவாள் = வெட்டுக்கத்தி.