உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

வேர்ச்சொற் கட்டுரைகள்

வெட்டுக்கிளி = செடி கொடிகளின் இலை காய்களை வெட்டும் பெரு விட்டி. வெட்டி-விட்டி = சிறுவிட்டி.

விட்டி-விட்டில் = மிகச் சிறுவிட்டி. 'இல்' ஒரு சிறுமைப் பொருட்

பின்னொட்டு.

விட்டி-விட்டிகை

வெட்டெனல்

=

=

“தீப்பட்ட விட்டிகை போல்."(திருவிசைப்.).

கடுமையாதல். "வெட்டெனப் பேசேல்'

"வெட்டெனவு மெத்தெனவை வெல்லாவாம்" (மூதுரை, 33).

வெளியாதல்

ஒரு பொருள் பிளந்தவுடன் இடையில் வெளியுண்டாகின்றது. விள்-வெள்- வெளி = திறந்த இடம், புறம், விசும்பு, வானம்.

வெளித்தல் = 1. மறை வெளிப்படுதல் குட்டு வெளியாதல். 2. எல்லாரும் பார்க்கும்படி வெளிப்படையாதல். "வெளித்து வைகுவ தரிதென வவருரு மேவி ஒளித்து வாழ்கின்ற தரும மன்னான் (கம்பரா. ஊர்தேடு. 136). 3. வெறிதாதல் (யாழ். அக.). 4. பயனிலதாதல் (இலக். அக.)

இடைவெளி = இரு சொல்லிற்கு அல்லது பொருளிற்கு இடைப்பட்ட வெற்றிடம்.

செண்டு வெளி = போர்க் குதிரைகளைப் பயிற்றும் வட்ட வெளி. திறந்த வெளி = கட்டட மில்லாத இடம்.

பரந்த வெளி = இடமகன்ற வெளி.

பரவெளி = பேருலக வெளி, பரமன் உறையும் நுண்ணியல் வெளி. புல்வெளி = புல் நிறைந்த வெளி நிலம்.

மந்தை வெளி = கால்நடை அமரும் வெற்றிடம்.

=

வானவெளி முற்றம்.

வெட்ட வெளி

விசும்பு. திறந்தவெளியா யிருக்கும் வீட்டின் உள்

=

பார்க்குமிட மெங்கும் திறந்த வெளியாயிருக்கும் இடம். “வெட்ட வெளியாக விளங்கும் பராபரமே" (தாயு. பராபர. 362). வெள்-வெட்ட = வெளியான. ஒ.நோ; நள்-நட்ட (நட்புச் செய்த).

வெளியாதல்=வெளிப்படுதல். "வெளிநின்ற மாற்றம் வெளியான பின்" (பாரத. வெளிப்பாட்டு.17).

வெளிவருதல் = அச்சிட்ட செய்தி பலருக்குங் கிடைத்தல்.

வெளிப்படு-வெளிப்படை. "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா" (தொல். உரி.2).

வெளி-வெளிவு = வெளிப்படை.