உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள் (பிளவுக் கருத்துவேர்)

153

வெளிப்படு-வெளிப்பாடு = வெளிப்படுகை. வெளிப்பாட்டுச் சருக்கம்

(பாரத)

வெளியிடுதல் = நூலை அச்சிட்டு வழங்குதல்.

வெளியிடு - வெளியீடு = வெளியிடப்பட்ட சுவடி அல்லது நூல். இற்றைத் தமிழ் நூல்களுட் பெரும்பாலன சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

வெளிவிடுதல் = வாய்விட்டுச் சொல்லுதல்.

வெளி வாங்குதல் = மழைபெய்து அல்லது முகில் கலைந்து வானந் திறத்தல்.

வெளி-வெளிப்பு = 1. வெளிப்புறம். 2. வெளியிடம்.

வெளியேறுதல் = 1. வீட்டுக்காரன் சொற்படி வீட்டை விட்டு வேறு வீடு செல்லுதல். 2. வெளியூருக்குக் குடிபோதல்.

வெளிக்குப் பேசுதல் = 1. தனக்குத் திறமையிருப்பது போல் பகட்டாகப் பேசுதல். 2. பகையை மறைத்து நல்லவர் போற் பேசுதல். வெளிக்குப்போதல் = மலங்கழிதல், மலங்கழிக்கச் செல்லுதல். வெளிக்கிருத்தல் = மலங்கழித்தல்.

வெளிக்கு வருதல் = மலங்கழிவுணர்ச்சி யுண்டாதல்.

புறம்பு (வெளிப்புறம்)

வெளியென்பது உள் என்பதற்கு எதிர். ஒரு பொருளிற் பிளவுண்டானபின், அப் பிளவிடம் அப் பொருட்கு உள்ளாயிராது வெளியா யிருத்தல் காண்க. ஒரு பொருட்குப் புறம்பானது அதற்கு அயலாதலால், பிறிதின்கிழமைப் புறம்புக் கருத்தில் அயன்மைக் கருத்துத் தோன்றும்.

ஒரு வீட்டின் உள்வாசலும் வெளிவாசலும் போல அகம் புறம் (உள் வெளி) இரண்டும் தற்கிழமையாயிருப்பின், புறம்புக் கருத்தில் வேற்றுமைக் கருத்தன்றி அயன்மைக் கருத்துத் தோன்றாது; உள்ளூர் வெளியூர் என்பனபோல இருவேறு பொருளாயின், தோன்றும்.

எ-டு; உள்நாடு x வெளிநாடு, உள்ளுலகம் x வெளியுலகம்.

உள்ளாள் x வெளியாள்.

X

இனி, எல்லாப் பொருள்களும் உள்ளும் புறம் ஒத்திராமையால், புறம்புக் கருத்தில் ஏமாற்று அல்லது மாயக் கருத்துந் தோன்றும்.

வெளித்தோற்றம்

=

1. புறத்தோற்றம். 2. வெளிப்பகட்டு, உள்

தோற்றத்திற்கு மாறானது.

உருவெளித் தோற்றம் = மாயவுருவம், பொய்க்காட்சி.