உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

வெறுமை

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஒன்றுமில்லாத

வெளி அல்லது திறந்தவெளி என்பது

வெற்றிடத்தையுங் குறிக்குமாதலால், வெளிமைக் கருத்தில் வெறுமை

அல்லது உள்ளீடின்மைக் கருத்துந் தோன்றும்.

வெள்ளிடை=ஒன்றுமில்லாத திறந்த வெளி.

வெள்ளிடை மலை = திறந்த வெளியிலுள்ள மலைபோல மிக

விளக்கமாய் தோன்றும் உண்மை.

வெள்ளிலை = பூ காய் கனியில்லாத வெறுங்கொடியின் இலை.

வெள்ளிலை-வெற்றிலை.

வெள்ளுழவு = ஒன்றும் விதைக்காது வெறுமையாக உழும் உழவு.

வெள்ளோட்டம்

=

விழாவல்லாத ஒத்திகைத் தேரோட்டம்.

காய்களை உள்ளீடில்லாதவாறு

வெள்-வேள் - வேளம் - வேழம்

செய்யும் ஒருவகை நோய் அல்லது பூச்சி.

வேழமுண்ட விளங்கனி = வேழ (வெறுமை) நோய்ப்பட்ட விளங்கனி. நோய்ப்பட்டவனை நோயுண்டவன் என்னும் வழக்குப்பற்றி, வேழமுண்ட விளங்கனியென விளம்பழத் தோட்டைச் சிதைக்காமல் அதன் உள்ளீட்டை மட்டும் யானை வுண்ணும் என்பது, அறியாதார் கூற்று. அஃது உத்திக்குப் பொருந்துவதுமன்று, முதற்காலத்தில் வெள்ளை யானையைமட்டும் குறித்த வேழம் என்னும் சொல்லை யானைப் பொதுப் பெயராகக் கொண்டதோடு, அதனை விளங்கனி நோயைக் குறிக்கும் வேழம் என்னுஞ் சொல்லொடு மயக்கினதினால் விளைந்த விளைவு அது.

வெண்ணிலம்=வெறுநிலம். வெண்பு = வெறுநிலம்.

வெண்கடன், வெண்ணிலை (வெள்+நிலை)க் கடன் = எழுத்துச் சான்றின்றிக் கைமாற் றாகக் கொடுக்குங் கடன்.

வெண்ணோவு = பிள்ளைப்பேற்றிக்கு முன்னுண்டாகும் வெறு நோவு. வெண்பாட்டம் = முன்பணமின்றி விடுங் குத்தகை.

வெள்-வெறு. வெறுங்கழுத்து, வெறுங்காது, வெறுங்காவல், வெறுங்கை, வெறுங்சோறு, வெறுந்தலை, வெறுநாள், வெறுநெற்றி, வெறும் பந்தயம், வெறும்புறம், வெறும்பானை, வெறும் பெரியவன், வெறும்பேச்சு, வெறும்பை, வெறும்பொய், வெறுவயிறு, வெறுவாய் முதலிய சொற்கள் பல்வேறு வகைப்பட்ட வெறுமையை யுணர்த்துவன,

வெறுமொன்று = தனியொன்று.

வெறிது = ஒன்றுமின்மை.