உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள் (பிளவுக் கருத்துவேர்)

155

வெறு-வெற்று. வெற்றாள், வெற்றுரை, வெ,ற்றுறை, வெற்றோலை, வெற்றுக்கட்டை, வெற்றுத்தாள், வெற்றுவண்டி, வெற்றுவேட்டு என்பன, வெவ்வேறு வகையில் வெறுமையை அல்லது உள்ளீடின்மையை உணர்த்தும்.

வெற்றெனல் = வெறுமையாதற் குறிப்பு.

வேற்றெனத் தொடுத்தல்

=

சிறந்த பொருளின்றி வெறுஞ்

சொற்களை நிறைத்துச் செய்யுளியற்றுதல்.

வெறு-வெறி. வெறித்தல் = 1. ஆள்களின்றி வெறுமையாதல். அரசனில்லாத அரண்மனை வெறித்துப் போயிற்று. 2. மழை நின்று வானம் வெறுமையாதல், மழைநின்று வெறித்துவிட்டது.

வெறிது-வெறிசு-வெறிச்சு.

வெறிச்செனல் = ஆள்களின்றி வெறுமையாயிருத்தற் குறிப்பு, திருவிழா முடிந்தபின் ஊரே வெறிச்சென்றிருக்கிறது. "வெறிச்சான திருமாளிகை" (குருபரம்.536)

வெறு-வறு. வறுநகை, வறுநிலம், வறும்புனம் என்பவை வெறுமையை யுணர்த்துவன.

வறுமை

பொருளில்லா வெறுமையே வறுமை.

வெள்-வெண்கு-வெங்கு-வெங்கம் = மிக்க வறுமை. வெங்கம் பரந்த அம்மையார்க்கு விளக் கெண்ணெய் அமுதுபடி.

வெங்கம்-வெங்கன் = வறியவன்.

வெறுங்கை

=

வறுமை. "வெறுங்கையா ரென்னும் பேரின்

மென்மையை வன்மை செய்யும்" (சேதுபு, இலக்குமி. 31.).

வெறுமை = வறுமை. “வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தரே யாகி"(நாலடி.329.)

வெறும்பயல் = ஒன்றுமில்லாதவன், வறியன்.

வெறு = வறு = வறுமை.

வறு-வறியன்-வறிஞன்.

பயனின்மை

வெறுமையும் வறுமையும் பயன்படாமைக் கேதுவாம்.

விள்-வீள்-வீண் = 1. பயனின்மை, (சூடா.) 2. பயனற்றது. 3. தேவை யில்லாதது.. "வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்" (தேவா. 677:3).