உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

வேர்ச்சொற் கட்டுரைகள்

முது - முதிர். முதிர்தல் = 1. முதுமை மிகுதல். அகவை முதிர்ந்தவர்.

2. விளைவு முற்றுதல். 3. கருநிரம்புதல். "சூன் முதிர்பு” (புறம். 161). 4. நிறைதல். "உறைமுதிரா நீரால்" (திணைமாலை. 103). 5. கடுமையாதல். முதிர்வேனில்(சங். அக.). 6. சொல் திருந்துதல். “முதிராக் கிளவியள்” (மணிமே. 22 : 181). க. முது,

தெ. முதுரு.

முதிர் - முதிர்ச்சி = 1. முற்றிய விளைவு. 2. முதுமை மிகுதி. 3. பழுத்த பருவம். 4. முதுக்குறைவு (திவா.) 5. வினை பயன்றரு நிலை.

முதிர் முதிரி - முதிரிமை = முதுமை (யாழ். அக.).

L. maturare, F. maturer, M.E. maturus, ripe, E. mature.

முது முதை பழங்கொல்லை. "முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்” (குறுந். 204).

முதை - முதையல் = பழங்காடு (சூடா.). 2. கடுகு (சங். அக.)

முது - (முத்து) - முற்று. முற்றுதல் = (செ.கு.வி.) 1. முதுமை யடைதல் (பி ங்.). 2. முதிர்தல். "முற்றி யிருந்த கனியொழிய" (நாலடி. 19). 3. முழு வளர்ச்சியுறுதல். "ஓர் முற்றா வுருவாகி" (திவ். திருவாய். 8 : 3 : 4). 4. தேர்ச்சி பெறுதல். "புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி" (சீவக. 1678). 5. மூண்டெழுதல். "முற்றெரிபோற் பொங்கி" (பு.வெ. 8 : 16). 6. வயிரங் கொள்ளுதல் (சூடா.). 7. நிறைவேறுதல். "இமையோர்க் குற்ற குறைமுற்ற” (கம்பரா. கடல்காண். 11). 8. முடிதல். “தங்கரும முற்றுந் துணை (நாலடி. 231). 9. இறத்தல். "மாற்றமுந் தாரானா லின்று முற்றும்" (திவ். பெரியாழ். 2 : 10 : 1). 10. கடுத்தல். 11. நிறைவேறுதல்.

99

(செ. குன்றா வி.) 1. செய்து முடித்தல். "வேள்வி முற்றி” (புறம். 15). 2. அழித்தல். “முற்றினன் முற்றின னென்று முன்பு வந்து" (கம்பரா. கும்பகர். 311). ம. முத்துக.

முற்றிழை = 1. வேலைப்பாடு திருந்திய அணிகலம். 2. அதை யணிந்த பெண். “பெற்றிலேன் முற்றிழையை” (திவ். பெரிய தி. 3: 7: 8).

முற்றல் = 1. மூப்பு (சூடா.). 2. முதிர்ச்சி. 3. முற்றியது. "முற்றன் மூங்கில்" (திவ். திருச்சந். 52). 4. வயிரம். 5. முற்றிய பழக்காய். "முற்றற் சிறுமந்தி...குற்றிப் பறிக்கும்" (நாலடி. 237). 6. நெற்று. 7. முடிகை (சூடா.). 8. திண்மை. "முற்றல் யானை” (திவ். திருச்சந். 52).

முற்ற = முடிய. முற்ற முடிய = முழுதும் முடியும்வரை. முற்றும் = முழுதும். "முற்று முணர்ந்தவ ரில்லை"

முற்று-முற்றன் = முழு நிறைவன். "முற்றிலா தானை முற்றனே யென்று மொழியினும்" (தேவா. 648 : 9).

முற்றிமை = முதிர்ந்த அறிவு. "முற்றிமை சொல்லின்" (சீவக. 2511).