உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல் (முன்மைக் கருத்துவேர்)

17

முற்று முற்றி. முற்றித்தல் = முடித்தல். “கரும மாயினும் முடியும் வாயின் முற்றித்து" (பெருங். மகத. 1: 69).

முது - மூது = முதுமை. “மூதானவன் முன்னர் முடிந்திடும்" (கம்பரா. பிராட்டி களங்காண். 18). க. மூதி.

மூதறிதல் = 1. அறிவு முதிர்தல். 2. பழமையான செய்திகளை யறிதல். "மூதறியு மம்மனைமார் சொல்லுவார்” (திவ். இயற். சிறிய ம.19) மூதா = கிழ ஆன். “வளைதலை மூதா" (பதிற். 13 : 5).

மூதாய் = பாட்டி. மூதணங்கு = காளி (சூடா.).

மூதிரி = 1. கிழமாடு. 2. கிழ எருமை. 3. எருமை (சது.).

மூதிரி-மூரி

=

1. பெருமை. "மூரிக் கடற்றானை" (பு.வெ. 3 : 3). 2. வலிமை. "மூரி வெஞ்சிலை" (கம்பரா. கும்பகருண. 26). 3. பழமை (W.). 4. கிழம். “மூரி யெருத்தா லுழவு” (இன். நாற். 21). 5. எருமை.

"மோட்டிள மூரி யுழக்க”

(கம்பரா. அகலிகை. 69). 6. எருது. "நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு" (பதிற்றுப். 67 : 15). 7. விடையோரை (திவா).

ம. மூரி. தெ., க., து. முரி.

மூதில் = 1. பழங்குடி. 2. பழமையான மறக்குடி. "தமியன் வந்த மூதிலாள" (புறம்.284)

மூதுணர்தல் = நன்றாக வுணர்தல். "மூதுணர்ந்தவ ரன்றி மொழிவாரோ" (உபதேசகா. சிவபுண். 229).

=

மூதுரை 1. பழமொழி. "மூழையுப் பறியாத தென்னு மூதுரையு மிலளே" (திவ். பெரியாழ். 3 : 7 : 4). 2. பிற்கால ஔவையார் இயற்றிய ஓர் அறநூல்.

மூதுவர் = முன்னோர். “விண்ணாட்டவர் மூதுவர்” (திருவிருத். 2). மூதை = (பெ.) 1. பழங்கொல்லை. 2. காளி. (W). (கு.பெ.எ.) முந்தை. "முதைவினை கடைக்கூட்ட” “(சிலப். 9) இறுதி வெண்பா).

முது

மூ. மூத்தல் = 1. அகவை யுயர்தல். "மூத்தோன் வருக வென்னாது” (புறம். 183). 2. முதுமை யுறுதல். “தமியண் மூத்தற்று" (குறள். 1007). 3. முடிதல். "மூவா முதலா வுலகம்” (சீவக. 1). 4. கெடுதல். "மதிலெய்த மூசரச் சிலை முதல்வர்க்கு” (தேவா. 936 : 4).

மூ = மூப்பு. (யாழ். அக.)

மூத்தண்ணன் = பெரியண்ணன்.

மூத்ததிகாரம்

=

தலைமை யதிகாரம் (T.A.S.).

மூத்த திருப்பதிகம் =காரைக்காலம்மையார் இயற்றிய பதிகம் (பெரியபு. காரைக்கா. 63).