உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

வேர்ச்சொற் கட்டுரைகள்

மூத்தப்பன் = பாட்டன். “எம்மு னெந்தை மூத்தப்பன் (தேவா. 1086 : 9) ம. முத்தப்பன்.

=

மூத்த பிள்ளை திருவாங்கூர் அரசரால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம்.

மூத்தவன் = 1. அகவையிற் பெரியவன். 2. அண்ணன் “மூத்தவற் கரசுவேண்டிய முன்புதூதெழுந்தருளி” (திங். பெரியதி. 4 : 6 : 7). 3. மேலோன்.

(W.)

மூத்தார் = 1. மூத்தோர். “மூத்தாரிளையார்" (ஆசாரக். 35). 2. கணவனின் தமையனார்.

மூத்தவள், மூத்தாள் = 1. முதியவள். (பிங்.) 2. அக்கை 3. முதல் மனைவி. 4. மூதேவி. (யாழ். அக.).

மூத்தோர் = 1. முதியவர். “விருந்தினர் மூத்தோர்” (ஆசாரக். 22.). 2. பண்டிதர். (திவா.) 3. மந்திரிமார். (திவா.(

மூத்தோன் = 1. அகவை மேற்பட்டவன். 2. அண்ணன். (பிங்.) 3. முதியவன். 4. 48-ற்குமேல் 64 அகவைக் குட்பட்டவன். (W.)

-

=

மூ மூப்பு = 1. அகவை யுயர்வு. 2. முதுமை. "முனிதக்க மூப்புள” (நாலடி. 92). 3. தலைமை. (யாழ். அக.). 4. ஒட்டாரச் செருக்கு. தன் மூப்பு முற்றதிகாரம். ம. மூப்பு, தெ., க. முப்பு.

மூப்பன் = 1. சில குலத்தாரின் ஊர்த் தலைவன். 2. சில குலத்தாரின் பட்டப்பெயர்.

மூப்பான் = 1. அகவை மேற்பட்டவன். 2. ஆட்டத்தில் வென்றவன். 3. முதியவன். 4. சிவபிரான். “மூப்பான் மழுவும்” (தனிப்பா. 1, 32 : 61).

மூப்பர் = 1. பெரியோர். "மூப்பரை யிகழ்ந்தோமாகில்” (அரிச். பு. நகர்நீ. 151). 2. கிறித்தவக் குருமாருள் ஒருவகையார் (Deacons) W.

மூப்பி = 1. முதுமகள். "மூப்பிமாராலே நீராட்டி” (சீவக. 1892, உரை). 2. தலைவி. (W).

மூப்புக்கழிவு = 1. ஊர்த் தலைவனுக்குச் சேரவேண்டிய பொருள். (M.M.509), 2. வரித் தொகையிலிருந்து ஊர்த் தலைவனுக்குரியதைக் கொடுத்ததனாற் கழிக்கப்படும் பகுதி.

மூப்பு முகனை = தலைமை பற்றிவரும் சொற் செல்வு (யாழ்ப்.).

=

மூதேவி = 1. திருமகளுக்கு முந்திப் பிறந்தவளென்று சொல்லப்படும் வறுமைப் பெண் தெய்வம். 2. சோம்பல், பகல் தூக்கம். மூதேவியடைந்து முடங்கிக் கிடக்கிறாள். (உ.வ.). 3. ஆக்கங் கெட்ட சோம்பேறிப் பெண். 4. ஒருவகைச் சொல்.