உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (மென்மைக் கருத்துவேர்)

எல்லா உயிரினங்கட்கும், இளமையிற் பெரும்பாலும் உடல் மென்மையாயிருப்பது இயல்பே. மாந்தரினத்துள், ஆடவனினும் பெண்டு மெல்லுடம்பியாயினும், குழவிப் பருவத்தில் இருபாலும் ஒருநிகரான மென்மையாகவே யிருத்தல் காண்க.

பச்சிளமையிலும்

சிற்றிளமையிலும் உடம்பும் தன்மையும் மென்மையா யிருப்பதால், இளமைக் கருத்தினின்று மென்மைக் கருத்துத் தோன்றிற்று. மென்மை அதையுடைய பொருளுக்கேற்றவாறு பலதிறப்படும். முல்-மெல் = மெதுவான. “ஆம்பல் மெல்லடை கிழிய" (அகம். 56).

=

மெல்-மென்மை 1. மெதுவுத் தன்மை. “கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்" (தொல். உரி. 24). 2. வலியின்மை. "மேவற்க மென்மை பகைவ ரகத்து” (குறள். 877). 3. மெல்லெழுத்து. "மேவு மென்மை மூக்கு" (நன். 75). 4. அமைதி. "மெல்லிய நல்லாருள் மென்மை" (நாலடி. 188). 5. தாழ்வு. “மென்சொ லேனும்...இகழார்" (கந்தபு. அவையட. 3). சிறுமை, நுண்மை.

6.

மெல்ல = 1. மெதுவாக, சிற்றளவாக. "தானோக்கி மெல்ல நகும்." (குறள். 1094). 2. அமைதியாக, அடக்கமாக. "மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி” (புறம்.73)

க. மெல்லெனெ தெ. மெல்லகா(g).

மெல்லென = மெல்ல.

மெல்லெனல் = 1. மெத்தெனற் குறிப்பு. "மெல்லென் சீறடி" (தொல். கற்பு. 5). 2. குரல் தாழ்த்திப் பேசற் குறிப்பு. “மெல்லெனக் கிளந்தன மாக" (பொருந. 122). 3. மந்தக்குறிப்பு (சூடா.).

மெல்லன் = மெல்லிய தன்மையன்.

மெல்லடை = மெல்லிய அடை, அப்ப வகை (பிங்.).

மெல்லணை = 1. மெத்தை. “மெல்லணைமேல் முன்துயின்றாய்” (திவ். பெருமாள். 9 : 3). 2. சட்டை (சூடா.)

=

மெல்லரி (திருமந். 422)

உயர்ந்த சிறிய அரிசிவகை. "உலைதந்த மெல்லரி"

மெல்லம் புலம்பு 379, உரை).

= மணலால் மெல்லிய நெய்தல் நிலம் (திருக்கோ.