உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

வேர்ச்சொற் கட்டுரைகள்

மெல்லி = மெல்லியலுடைய பெண். "மெல்லி நல்லாள் தோள்சேர்” (ஆத்திசூ)

மெல்லிக்கை = சிறியது, பருமனற்றது (W.).

மெல்லிது = 1. மென்மையான பொருள். "மலரினும் மெல்லிது காமம்' (குறள். 1289). 2. ஒல்லியானது. 3. சிறியது.

மெல்லிது மெல்லிசு. மெல்லிதரம் - மெல்லிசரம்.

மெல்லிசை = மெதுவான ஓசை.

மெல்லிசை வண்ணம் = மெல்லெழுத்து மிகுந்துவரும் செய்யு ளோசை. “மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே" (தொல். செய். 215).

மெல்லியல் = 1. மென்மையான இயல்பு. "மெல்லியற் குறுமகள்” (குறுந். 89). 2. பெண். "மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள்" (கம்பரா. மாயாசனக. 18). 3. இளங்கொம்பு (சூடா.).

மெல்லியர் = 1. வலிமை யில்லாதவர். "தேவர் மெல்லியர்" (கம்பரா. யுத்த. மந்திரப். 32). 2. உடல் மெலிந்தவர் (W.). 3. எளியவர். “எச்சத்தின் மெல்லியராகி" (நாலடி. 299). 4. புல்லிய

குணமுடையவர். “மடவர்

மெல்லியர் செல்லினும்" (புறம். 106). 5. பெண்டிர் (W.)

மெல்லியலாள் = பெண். "மெல்லியலா ளொடும்பாடி" (தேவா. 284: 8). மெல்லியன் = அறிவு குன்றியவன் (புறம். 184).

மெல்லினம் = மெல்லொலியுடைய மெய்யெழுத்துகள். (நன். 69). மெல்லெழுத்து = மெல்லின மெய். "மெல்லெழுத் தென்ப ஙஞண நமன." (தொல். நூன். 20).

மெல்லொற்று = மெல்லின மெய். "மெல்லொற்றுத் தொடர்மொழி" (தொல். குற்றிய. 9).

மெல்வினை = பணி(சரியை), பத்தி(கிரியை) என்னும் மதவினைகள். “எளிதானவற்றை மெல்வினையே யென்றது" (திருக்களிற்றுப். 17). ஒ.நோ: மெல்:

E. mellow, soft, OE. mela, melw, Gk. melakos, soft.

L. mollis, soft; molluscus, soft-bodied animal; mollusca, sub-kingdom of soft- bodied animals. F. mollusque, E. mollusc.

L. mollificare, make soft; F. mollifier, E. mollify. Rom. molliare, OF. mollier, moisten, E. moil.

E. mild, gentle; OE. milde, OS. mildi, OHG milt; ON. mildr; Goth. milds.

மென்கண்

=

(BIT GOTLD 60fl. 92).

இரக்கம். "மென்கண் பெருகி னறம்பெருகும் '

மென்கணம் = மெல்லின மெய்கள் (நன். 158, உரை).