உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஒ.நோ: Goth. mel, grind; malma, sand; ON. malmr, ore; E. malm, soft chalky rock; OE. mealm, cog. w. OS., OHG. melm, dust.

E. meal, OE. mela, OS., OHG melo, ON. mjol, cog. w. L. molere, grind, E.mill, building fitted with machinery for grinding corn.

grind.

OE. mylen, OS. mulin, OHG. muli(n) f. LL. molinum, L. mila, mill f.mole,

E. molar, grinder (mammal's back teeth serving to grind) f. molaris(mela, millstone).

66

E. mull (Sc.), snuff box (var. of mill), box originally having a grinder.

E. muller, tool used for grinding powders etc. on slab.

ME. mol, mulour f. mul, grind.

E. mullock(Austral.), refuse from which gold has been extracted, f. dial. mull, dust, rel. to OE. mgl, dust, MDu. mul, mol f. Gme root mul-, grind.

E. multure, toll of grain or flour paid to muller.

ME. or OF. milture f. med.L. molitura f. molere, grind.

மெல்-மெள்-மெள்ள பேரரவம்” (திவ். திருப்பா. 6). மெள் - மெள்ளென

=

=

மெல்ல. "மெள்ள வெழுந்தரி யென்ற

மெல்லென. "மெள்ளெனவே மொய்க்கு

நெய்க்குடந் தன்னை யெறும்பு" (திருவாச. 6 : 24).

மெள்-மெள்ளம்

=

விரைவின்மை. மெள்ளமாய்ப் போ (உ.வ).

மெல்-மெலி. மெலிதல் = 1. வலி குறைதல். 2. உடல் இளைத்தல். “ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை” (திருவாச. 6 : 10). 3. எளியராதல் (W.). 4. வருந்துதல். "அளப்பினாள் மெலிகிற்பாள்" (காசிக. மகளிர். 8). 5. கெடுதல். "மெலியு நம்முடன் மேல்வினை யானவே” (தேவா. 318 : 10). 6. வல்லெழுத்து இனமெல்லெழுத்தாக மாறுதல். 'குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது" (புறம். 21, உரை). 7. முரலில்(சுரத்தில்) தாழ்தல். “யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய"(சிலப். 3 : 92),

மெலிவு = 1. தளர்ச்சி. “அணியிழை மெலிவின்" (பு.வெ. 11, பெண்பாற். 5). 2. களைப்பு. “மெலிவு தீர்தி” (கம்பரா. திருவடி. 5). 3. பாடு. "எங்களுக் குண்டான மெலிவுகளுங் சொல்லி" (Insc. Pudu. 799). 4 துன்பம். 5. தோல்வி. "மெலிவென்பது முணர்ந்தேன்" (கம்பரா. முதற்போ. 181). 6. கொடுமை. "வலியவர் மெலிவு செய்தால்" (கம்பரா. வாலிவதை. 80). 7. சமனுக்குக் கீழ்ப்பட்ட ஓசை. "வலிவும் மெலிவுஞ் சமனு மெல்லாம்" (சிலப். 3 : 93).

=

மெலித்தல் செய்யுள் திரிபுகள் ஆறனுள், வல்லெழுத்து இனமெல்லெழுத்தாக மாறுதல் அல்லது மாற்றப்படுதல். (நன். 155). மெலிந்தோன் = 1. வலியற்றவன். 2. நோய்ந்தவன். 3. ஏழை.

மெலிப்பு = 1. மெலித்தல், மெலியச் செய்தல். 2. மெல்லெழுத்து. "வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும்" (தொல். தொகை. 15).