உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

வேர்ச்சொற் கட்டுரைகள்

"மெத்தென மாதைக் கொண்டு வருகுவல்" (திருவாலவா. 62 : 7). 4. மந்தக் குறிப்பு (ஈடு, 1: 10 : 11). க. மெத்தனெ.

மெத்தெனவு = 1. அமைந்த குணம். 2. வளைந்து கொடுக்குந் தன்மை. 3. கவலையின்மை.

மெத்தெனவு-மெத்தனவு = 1. காலத்தாழ்ப்பு. 2. கவலையின்மை. “மெத்தனவிற் றுயிலுங்கால்" (திருவாலவா. 27 : 70).

மெத்தனவு-மெத்தனம் பொருட்படுத்தாமை.

1. காலத்தாழ்ப்பு. 2. கவலையின்மை,

மெத்து-மெத்தை = மெதுவான படுக்கை. "ஒரு பாம்பை மெத்தையாக விரித்து” (திவ். பெரியாழ். 5 : 1 : 7). "கனகதண்டி மேலுக்குப் போட மெத்தையில்லை யென்பார்க்கும்" (தனிப்பா.) 2. பஞ்சணை. 3. துயிலிடம் (திவா.). 4. சட்டை (பிங்.). 5. வேட்டையாடுவோர் தோளிலிடும் அணை. “வலத்தோளிலே இட்ட மெத்தையும்” (திவ். திருநெடுந். 21, வியா. ப. 170). ம., தெ. மெத்த, க. மெத்தெ.

மெத்தைக் கட்டில் = மெதுவணை பரப்பிய கட்டில்.

மெத்தைச் சட்டை = பஞ்சு உள்வைத்துத் தைத்த சட்டை.

மெத்தைப் பாய் = மெத்தைமேல் விரிக்கும் பட்டுப் பாய். ம. மெத்தப் பாயி. மெதுகு-மெருகு. ஒ.நோ: விதை-விரை.

மெருகு = மெதுவான பளபளப்பு.

ம., தெ., க., து. மெருகு(g).

மெதுகரம்-மெருகரம் = மெருகு வேலையிற் பயன்படும் அரவகை. (C.G). மெதுகாணி-மெருகாணி = மெருகுவளை யென்னும் தட்டார் கருவி. மெருகிடுதல் = பளபளப்பு உண்டாக்குதல் (W.).

மெருகுக்கல் = மெருகிட உதவுங் கல் (C.E.M.).

மெருகுச் சுண்ணாம்பு = சுவரிற் பூசும் சிப்பிச் சாந்து போன்ற நுண்ணிய சுண்ணச் சாந்து.

மெருகு தேய்த்தல் = மெருகிடுதல்.

மெருகு போடுதல் = மெருகிடுதல்.

மெருகு மண் = தட்டார் மெருகிடுதற் குதவும் மண்வகை.

மெருகு வளை = மெருகிட உதவும் தட்டார் கருவிவகை. மெருகெண்ணெய் = 1. பளபளப்பிற்காக மரப்பண்டங்களின் மேற் பூசும் எண்ணெய் (W.). 2. மினுக்கெண்ணெய் (யாழ். அக.).

மெருகோடு = மேற்புறத்திற் பளபளப்புள்ள ஓடு (C.E.M.).