உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஒ.நோ: “சேரே திரட்சி” (தொல். உரி. 65). மிகுதியால் வளமும் பருமையால் வலிமையும் உண்டாகும். இருவர் அல்லது இரு படைகள் பொருந்தி அல்லது கூடிப் பொருவதே போர். பொரு(பொருந்து)-போர். கல-கலாம், கலகம். கைகலத்தல் என்னும் வழக்கையும் நோக்குக.

மல்-மல்லல் = 1. மிகுதி. 2. வளம். “மல்லல் வளனே” (தொல். உரி. 7). 3. செல்வம். "மல்லற்கேண் மன்னுக" (பரிபா. 11 : 121). 4. வலிமை. "மல்லன் மழவிடை யூர்ந்தாற்கு" (சிலப். 17, கொளு. 3). 5. பொலிவு (சூடா.). 6. அழகு. "மல்லற்றன் னிறமொன்றில்" (திருக்கோ. 58, பேரா.).

மல்-மலை. மலைதல் = 1. ஒத்தல். "கவிகை மாமதிக் கடவுளை மலைய" (கந்தபு. சூரனரசிருக். 9). 2. எதிர்த்தல் (சூடா.). 3. பகைத்து மாறுபடுதல். "இகன்மலைந் தெழுந்த போதில்" (சீவக. 747). 4. போராடுதல். "தத்த மதங்களே யமைவதாக வரற்றி மலைந்தனர்" (திருவாச. 4 : 53).

க.மலெ.

மலைத்தல் = 1. மாறுபடுதல். “மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார்" (பு.வெ. 3 : 24). 2. பொருதல். “வேந்தனோடு... மலைத்தனை யென்பது" (புறம். 36). 3. வருத்துதல். "மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப்" (புறம்.10). மலை = 1. ஈட்டம், சொன்மலை (திருமுருகு. 263). 2. மிகுதி. 3.வளமுள்ள பெரிய இடம். "வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே" (நன். பொதுப்பா. 28). "மலையினும் மாணப் பெரிது" (குறள். 124). 4. போர்த் தொழில். "மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை" (மலைபடு. 331).

ம. மல, க. மலெ.

மல்-மல்கு. மல்குதல் = 1. அதிகரித்தல், மிகுதல். "மணநிரை மல்கிய மன்று" (பு.வெ. 1:13). 2. நிறைதல். "திசையாவு மல்கின்றே" (1607). 3 செழித்தல். “உயிரனைத்து மல்க மழைமுகி லானாய்" (தணிகைப்பு. இந்திர. 21).

மல்கு மல்கா-மல்லா. மல்லாத்தல் = 1. மலர்ந்தாற்போல் முகம் மேனோக்கிக் கிடத்தல். “நரகத்தின் மல்லாக்கத் தள்ளி" (திருமந். 199). 2. தோற்றுப்போதல் (உ.வ.).

=

1. கொடி முதலியவற்றைப்

மல்கா-மல்காத்து (பி.வி.). மல்காத்துதல் படரவிடுதல். 2. முகம் மேலாகக் கிடக்கச் செய்தல்.

மல்லா-மல்லார். மல்லார்தல் = 1. பரத்தல், விரிதல். 2. முகம்

மேனோக்கிக் கிடத்தல். கை காலைப் பரப்பிக்கொண்டு

கிடக்கிறான் (உ.வ.).

மல்லார்ந்து

மல்லார்-மல்லாரி = 1. பரந்த பறைவகை. 2. அகன்று பருத்தவள். மானங்கெட்ட மல்லாரி (உ.வ.).

மல்லாரி

மல்லரி = பறைவகை (சங். அக.).