உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல் (பொருந்தற் கருத்துவேர்)

மல்-மல்லாரி

=

சண்டைக்காரி (W.).

29

மல்லார்-மலர். மலர்தல் = 1. மிகுதல். “செழுமல ராவிநீங்கு மெல் லையில்" (சீவக. 3079). 2. பரத்தல். "வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது" (பதிற். 88 : 1). 3. அகலித்தல். "மலரத் திறந்த வாயில்" (குறிஞ்சிப். 203). 4. மொட்டு விரிதல். “வரைமேற் காந்தள் மலராக்கால்” (நாலடி. 283).5 மனமகிழ்தல். “வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல்" (பெரியபு. தடுத்தாட். 161). 6. முகமலர்தல். "பூம்புன லூரன்பு....முகமலர்ந்த கோதை” (திருக்கோ.

363, (615).

மலர்த்தல்

=

1. மொட்டு விரியச் செய்தல். 2. குப்புறக் கிடப்பவனை மல்லாக்கச் செய்தல். 3.மற்போரில் தோற்கடித்தல். 4. ஏமாற்றுதல். 5. வாங்கின கடனைக் கொடாமற்போதல்.

முகம் மலர் போன்றதென்பதும், முகம் மேனோக்கிக் கிடத்தல் மொட்டு விரிந்த நிலையையும் முகங் குப்புறக் கிடத்தல் மலர்ந்த பூக் குவிந்த நிலையையும் ஒக்குமென்பதும் கருத்து.

மலர்-அலர்.

மல்-மல்லி = அகன்று தடித்தவள் (யாழ்ப்.).

மல்-மல்லன் = 1. மற்போர்செய்வோன். “மறத்தொடு மல்லர் மறங்கடந்த" (பு.வெ. 9 : 4). 2. பெருமையிற் சிறந்தோன் (பிங்.).

மல்லன்-வ. மல்ல.

மல்-மல்லம் = 1. அகன்ற தட்டம் (அக. நி.). 2. கன்னம்(கதுப்பு) (யாழ். அக.). 3. மற்போர் (W.). 4. வலிமை. மல்லம். வ. மல்ல.

மல் - மல்லை

=

1.பெருமை. "மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர்” (திவ். திருவாய். 8 : 9 : 8), 2. வளம். "மல்லைப் பழனத்து' (பதினொ. ஆளுடை. திருவுலா. 8).

99

மல்-மலி. மலிதல் = 1. விம்முதல், பருத்தல். “முலை மலிந்து" (பு.வெ. 11. பெண். 2). 2. மிகுதல். "கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541). 3. பரத்தல். "மலைமலிந் தன்னமார்பும்" (பு.வெ. 11, பெண். 2). 4. விரைதல். "நீ மலிந்து செல்வாய்" (பு.வெ. 11, பெண். 4). 5. நெருங்குதல். (தொல். சொல். 396, உரை). 6. நிறைதல். “மலிகடற் றண் சேர்ப்ப" (நாலடி. 98).7. விலை நயத்தல் (உ.வ.). 8. புணர்ச்சியின் மகிழ்தல். “மலிதலு மூடலும்” (தொல். பொருள். 41. 9. செருக்குதல். “மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே” (புறம். 77). 10. செருக்கிச் சொல்லுதல். “உறுபுகழ் மலிந்தன்று" (பு.வெ. 10 : 4, கொளு).

மலி-மலிவு = 1.மிகுதி. 2. நிறைவு. “மனைவேள்வி மலிவுரைத் தன்று” (பு.வெ. 9 : 27). 3. உயர்வு. "இம்முப்பாலும், மாமலி வுடனே மற்ற மெலிவொடு சமனு மாமே" (சூடா. 12 : 10). 4. நயவிலை. "மலிவு குறைவது விசாரித்திடுவர்"