உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

வேர்ச்சொற் கட்டுரைகள்

(அறப். சத. 83). 5. மகிழ்ச்சி. “மலிவுடை யுள்ளத்தான்" (பரிபா. 19 : 88). 6 புணர்ச்சியின்ப மகிழ்ச்சி. “மலிவும் புலவியும்" (தொல். செய். 185).

மலிவு-மலிபு = மிகுதி. “வாடையது மலிபு" (பு.வெ. 8 : 16). :

மலி-மலிர். மலிர்தல் = 1. பெருகுதல். "ஓத மில்லிறந்து மலிர" (நற். 117). 2. நீர் முதலியன ஒழுகுதல். "பின்னு மலிரும் பிசிர்போல" (பரிபா. 6 : 83). 3. பயிலுதல், அடிக்கடி வருதல். “கனியின் மலரின் மலிர்கால்" (பரிபா. 8

54).

மல்-மால் = 1. பெருமை. “சினமால் விடையுடையான்" (திருவாச. 34 : 3). 2. பெருமையுடையவன். "மாமஞ்ஞை யூர்ந்து நின்ற மால்" (சீவக. 286). 3. வளமை (அக. நி.). 4. மலை (அக.நி.).

மால்-மாள்-மாளிகை = 1. மாடமுள்ள பெருவீடு (பிங்.). "மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்" (பெரியபு. கோச்செங். 16). 2. அரண்மனை (பிங்.). 3. கோயில். “உத்தரகோச மங்கை...மாளிகைபாடி" (திருவாச. 16 : 3).

மாளிகை-வ. மாளிகா.

மாளிகைச் சாந்து = உயர்ந்த கலவைச் சந்தனம். "இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை" (திவ். திருப்பல். 8, வியா.).

=

மாள்-மாண். மாணுதல் = மிகுதல் = 1. மிகுதல், பருத்தல். "மலையினும் மாணப் பெரிது.” (குறள். 124). 2. நிறைதல். "மாணாப் பிறப்பு" (குறள். 1002), 3. நன்றாதல். "மாண்டற் கரிதாம் பயன்" (குறள். 177). 4. சிறத்தல், மாட்சிமைப்படுதல்.

மாண்-மாண்பு = 1. பெருமை (யாழ். அக.). 2. மாட்சிமை"இல்லவண் மாண்பானால்" (குறள். 53). 3. நன்மை (அரு.நி.). 4. அழகு "அரன்மிடற்றின் மாண்ப தன்றே” (திருக்கோ. 323).

66

மாண்-மாட்சி = 1. மகமை (மகிமை) 'எனைமாட்சித் தாகியக் கண்ணும்” (குறள். 750). 2. தெளிவு, விளக்கம் "மூலவோலை மாட்சியிற் காட்ட வைத்தேன்" (பெரியபு. தடுத்தாட். 56). 3. அழகு "நூலோர் புகழ்ந்த மாட்சிய.....புரவி" (பெரும்பாண். 487). 4. இயல்பு "மரபுநிலை தெரியா மாட்சிய" (தொல். மரபு. 94).

மாட்சி

=

மாட்சிமை = மகமைத் தன்மை. "மாட்சிமையுடையோர்

கொடுக்கும் மரபுபோல" (சிலப். 16 : 23, உரை).

மாண்-மாட்சிமை. “மாணெழில்....தோளாய்" (கலித். 20 : 15).

மாண்-மாணம் = 1. மாட்சிமை (அக. நி.).

மாண்-மாணல் = 1. மாட்சிமை. 2. நன்மை (அரு. நி.).

மாணம்-மாடம் = 1. வானளாவிய பன்னிலை மாளிகை. "மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை” (திருவாச. 16 : 4). "எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்கு" (நறுந். 54). 2. மேட்டிடத்திற் கட்டிய பெருங்கோயில்.