உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல் (பொருந்தற் கருத்துவேர்)

=

65

முடிதல் 1. இறுதியாதல். கூட்டம் முடிந்தவுடன் தலைவர் போய் விட்டார் (உ.வ.) 2. முற்றுப்பெறுதல். இவ் விதழுடன் செந்தமிழ்ச் செல்வியின் 50 ஆம் சிலம்பு முடிகின்றது. 3. நிறைவேறுதல். “முட்டின்றி மூன்றும் முடியுமேல்" (நாலடி. 250). 4. செய்ய முடிதல், இயலுதல். குறுகிய காலத்தில் என்னால் அதைச் செய்ய முடியாது (உ.வ.). 5. வாழ்நாள் முடிந்து இறத்தல். “கயலேர் கண்ணி கணவனொடு முடிய" (பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு). 6. அழிதல். மூவேந்தர் குலமும் 16ஆம் நூற்றாண்டொடு முடிந்து விட்டது. ஒ.நோ: மாளுதல் = இறத்தல், செய்ய முடிதல்; இயலுதல்.

ம. முடிக., க. முடி.

முடித்தல் = 1. முற்றுவித்தல். நூல் முழுவதையும் மும்மாதத்திற்குள் எழுதி முடித்துவிட்டார் (உ.வ.). "நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத் திடர்முடித்தான்” (கம்பரா.மிதிலை.88) 2. நிறைவேற்றுதல். “அருந்தொழில் முடியரோ திருந்துவேற் கொற்றன் (புறம். 171). 3. அழித்தல். "சேனையை...முடிக்குவன்" (கம்பரா. மிதிலை. 98).

முடி-மடி. மடிதல் = 1. சாதல். "வல்லது மடிதலே யென்னின் மாறுதிர்" (கம்பரா. அதிகா. 6). 2. அழிதல். "குடிமடிந்து குற்றம் பெருகும் (குறள். 604).

மடித்தல் = அழித்தல். “முரனெலா மடிப்ப” (கம்பரா. தாடகை. 35).

99

முட்டு மட்டு = 1. அளவு. "மட்டுப்படாக் கொங்கை மானார்” (கம்பர்). 2. நில அளவுவகை. 3. எல்லை. "வடிவுக்கோர் மட்டுண் டாமோ (ஞானவா.தேவா. 1) 4. குத்து மதிப்பு. 5. அடக்கம். 6. சிக்கன அளவு. மட்டாய்ச் செலவடு (W.). 7. ஒப்பு. 8. சிறுமை. 9. தாழ்வு. 10. குறைவு.

ஒன்றோடொன்று முட்டுகிற நிலையிலேயே, ஒன்றன் நீள அளவு தெரிதல் காண்க.

ம., தெ., க. மட்டு.

மட்டு மட்டம் = 1. அளவு. 2. சமநிலை. 3. அளவுகோல். 4. எல்லை (W). 5. குத்துமதிப்பு (உத்தேசம்) (W). 6. ஒப்பு, சமவெண் (W). 7. சிறுமை. மட்டப் பூ (S. I. I. II, 184). 8. தாழ்வு, குறைவு. 9 அடக்கம். 10. செட்டு. 11. நடுத்தர நிலை. 12 சிறுதரக் குதிரை. 13 ஆணானைக் குட்டி (யாழ்ப்) 14. ஒரே உயரமுள்ள நிலை. 15. வாழை, கரும்பு முதலியவற்றின் கன்று (W.) 16. மூன்றொத்துடைய தாளம் (சிலப். 3:151, உரை). 17. கேடகம். 18. பொன் மணியின் உறுப்புவகை (W.).

க.மட்ட

மட்டக்கோல், மட்டங் கட்டுதல், மட்டச் சுவர், மட்டஞ் செய்தல், மட்டத்தரம், மட்டந் தட்டுதல், மட்டநூல், மட்டப்பலகை, மட்டப்பா (மொட்டை மாடி), மட்டப்பொன், மட்டம் பார்த்தல், மட்டம் பிடித்தல், மட்டம் போடுதல், மட்ட வேலைக்காரன், மட்ட விழைப்புளி, மட்டவேலை முதலிய வழக்குச் சொற்களை நோக்குக.