உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

99

வேர்ச்சொற் கட்டுரைகள் மறை” (குறள். 596). 13. மறைவாகச் செய்யும் மந்திரச் சூழ்வினை. “இராம னருமறைக்கு" (அகம் 70). 14. பொதுமக்கட்குத் தெரியாத மறை பொருள் கொண்ட மதவியல் அறிவுநூல். "மறைமொழி தானே மந்திர மென்ப" (தொல். செய். 176). 15. ஆரிய வேதம். “அளபிற் கோட லந்தணர் மறைத்தே ” (தொல். பிறப். 20) 16. ஆரிய மெய்ப்பொருள் நூல் (உபநிடதம்). “வேதத்து மறைநீ” (பரிபா. 3: 66). 17. ஆரியத் தொழன்மறை (ஆகமம்). "மறைமுறை யறிந்த வறிவினை கிழவரும்" (ஞான. 35). 18. அறிவியல் நூல். “நரம்பின் மறைய வென்மனார் புலவர்" (தொல். நூன். 33).

ஒ.நோ: கள்-கர்-கரு-கருமை, கள்-களவு, கள்-கர்-கர-கரவு.

முட்டு முட்டி-முடி.

ம்

மாந்தரும் அஃறிணைப் பொருள்களும் மாந்தரை அல்லது அஃறிணைப் பொருள்களை முட்டுவது தலையாலேயே யாதலால், தலையும் தலைபோன்ற உச்சிப் பகுதியும் தலையிலுள்ள உறுப்பும் அணிகலமும் முடியெனப் பெயர் பெறும்.

=

முடி 1. தலை. "அதுவே சிவன் முடிமேற் றான்கண்டு" (திவ். திருவாய். 2 : 8 : 6). 2. ஆடவர் உச்சிக் குடுமி (பிங்). 3. பெண்டிர் கொண்டை போடும் ஐம்பாலுள் உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை (திவா.) 4.தலைமயிர். முடிக் காணிக்கை (உ. வ.) 5. மயிர். பன்றிமுடி (உ.வ.) 6.தலையிலணியும் மகுடம். "ஞாயிற்றணி வனப்பமைந்த.....புனைமுடி (பரிபா. 13 : 2). 7. மலையுச்சி. "முடியை மோயின னின்றுழி" (கம்பரா. மீட்சி. 186). 8. தேங்காய்க் குடுமி (யாழ்ப்).

99

விலங்கு மயிரையும் முடியென்றது, மயிர் என்பது இடக்கர்ச் சொல்லாகி மயிரை முடியென்னும் இடக்கரடக்கல் வழக்கெழுந்த பிற்காலத்ததாகும்.

நாற்றுமுடி, மூட்டைமுடிச்சு முதலிய கூட்டுச்சொற்களிலுள்ள முடி யென்னும் சொல் வளைத்தல் அல்லது சுற்றுதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட வேறொரு சொல்லினின்று தோன்றியதாகும்.

நட்டமாக நிற்கும் பொருள்களின் உச்சிப்பகுதி அவற்றிற்கு முடிபோன் றிருத்தலால் அது முடியெனப்பட்டது. மலையுச்சி வான முகட்டை முட்டிக்கொண்டிருப்பதாகப் பாடவும் சொல்லவும் படுதல் காண்க. மலை முடிகளுள் உயர்ந்தது கொடுமுடி.

முடி யென்னுஞ் சொல் ஒரு பொருளின் முடிவான இறுதிப் பகுதியைக் குறித்தலால், ஒரு வினை முடிதலைக் குறிக்கும் வினைச் சொல்லாகவும் அஃது ஆளப்பட்டது.

66

ம்

"கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே" என்னும் 32ஆம் புறப்பாட்டடியில், உச்சிக் குடுமியைக் குறிக்குஞ் சொல்லே, சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுங் குறித்தல் காண்க.