உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

63

தமிழிற் பெரும்பாலும் துணைவினையாக வழங்கும் மாட்டுதல் என்னும் சொல் கன்னடத்தில், செய்தல் என்னும் பொருளில் தலைமை வினையாகவே வழங்குகின்றது.

-டு: நானு ஈ கெலச மாடுவெனு = நான் இவ் வேலையைச் செய்வேன்.

மள்-மண்-மண. மணத்தல் = 1. பொருந்துதல், "மத்தகத் தருவியின் மணந்த வோடைய” (சீவக. 2211). 2. வந்து கூடுதல். "நிரை மணந்த காலையே” (சீவக. 418.). கலத்தல். "அறையும் பொறையு மணந்த தலைய" (புறம்.118).4 நேர்தல். "மருவுற மணந்த நட்பு” (கலித். 46). 5. கமழ்தல். "மணந்த சோலையும்" (அரிச்.பு. விவாக. 98). 6. அணைத்தல். “திருந்திழை மென்றோள் மணந்தவன்" (கலித் 131). 7. புணர்தல் (பிங்.) "மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்” (கலித். 24). 8. மணம்புரிதல் “மணந்தார் பிரிவுள்ளி” (நாலடி. 397). 9. கூடியிருத்தல். "மணக்குங்கான் மலரன்ன தகைய வாய்." (கலித். 25.)

மண-மணம் = 1. கூடுகை. "ஏதிலார் மணந்தனில் மனம்போக்கும்" (காசிக. மகளிர். 10). 2. அன்பினைந்திணை, கைக்கிளை, பெருந்திணை என்னும் மணவகை. 3. நறுநாற்றம். “மணநாறு படப்பை" (பெரும்பாண். 354). 4. நறுமணப் பொருள் "மணங்கமழ் நாற்றம்" (மதுரைக். 447). 5. மதிப்பு. பணமுள்ள வனுக்கே மணமுண்டு” (பழ.) 6. நன்னிலை. "மக்கி மணங் குலைந்து" (இராமநா. உயுத். 81).

66

மணமலி = மருக்கொழுந்து (மலை.)

மள்-மறு. ஒ.நோ: வெள்-வெறு, வெள்ளிலை-வெற்றிலை.

மறு - மறை. மறைதல் = 1. இருட்குட் புகுதல். 2. ஒளிந்துகொள்ளுதல். "புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று” (குறள். 274). 3. தோன்றா தொழிதல். “ஞாயிறு குடமலை மறைய" (நற். 239).

மறைத்தல் = 1. ஒளித்தல். "மறைப்பேன்மற் காமத்தை” (குறள். 1253). 2. மூடுதல். "அற்ற மறைத்தலோ புல்லறிவு" (குறள். 846). 3. தீது வாராமற் காத்தல். "குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு” (குறள். 1029).

மறை = 1. மறைகை. 2. மறைவுச் செய்திகள். "நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை" (கலித். 133). 3. மறைக்கை. “வெயின்மறைக் கொண்ட” (புறம். 60). 4. கேடகம் (அக.நி.). 5. பெண்குறி. “அடியி லிருந்த மறை மாண்பை” (அருட்பா, 1, இங்கித. 94). 6. களவுப் புணர்ச்சி "மறையல ராகி மன்றத் தஃதே" (குறுந். 97). 7. உருக்கரந்த கோலம். "மறைவல்லன்” (சீவக. 2027). 8. மறைவிடம் (சங்.அக.). 9. புகலிடம். “வாசவன்...மறைபுகாது" (குற்றா. தல. தக்கன் வேள்வி, 44). 10. சிறைக்கூடம். "மறையிடை வந்து' (கந்தபு. வீரவாகு சயந் 22). 11. வஞ்சனை. “மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளாது” (கலித். 143). 12. மறைபொருள் (இரகசியம்). “புறப்படுத்தா னாகு