உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

வேர்ச்சொற் கட்டுரைகள்

மாயம்-மாயன் = 1. கரியன். "வண்ணமு மாய னவனிவன் சேயன்" (தொல். உவம. 30, உரை). 2. திருமால். “மாயனாய் மலரவ னாகி" (தேவா. 1050: 6). 3. வஞ்சகன் (பிங்.).

மாயன்-மாயவன் = திருமால். "பெரியவனை மாயவனை" (சிலப். 17, படர்க்கைப் பரவல்).

மாயவள் = 1. கரிய நிறமுடையவள். "மாயவண் மேனிபோல்" (கலித். 35).2. காளி, "மாயவ ளாடிய மரக்கா லாடலும்" (சிலப். 659)

மாயன்-மாயோன் = 1. கருநிறமுடையோன் (பரிபா. 3: 1, உரை). 2. திருமால். "மாயோன் மேய காடுறை யுலகமும்" (தொல். அகத். 5).

மாயோள் = 1. கருநிறமுடையவள். "மாயோள் முன்கை யாய்தொடி" (பொருந. 14). 2. மாமை நிறமுடைவள். "மாயோள் பசலை நீக்கினன்" (ஐங். 145). 3. வஞ்சகி (W.). 4. காளி.

மாய்-மாயை. ஒ.நோ: சாய்-சாயை. மாயை = 1. காளி (பிங்.). 2. மறைப் பாற்றல் (திரோதான சக்தி) - (நாமதீப. 753.) 3. பொய்த் தோற்றம். 4. பொய்த் தோற்றவுரு. 5. மாயக்கலை (மாயவித்தை). "மாயையி னொளித்த மணிமே கலைதனை” (மணிமே. 18 155). 6. வஞ்சகம் (சூடா.). 7. மூல முதனிலை (பிரகிருதி) “பூதலய மாகின்ற மாயை முதலென்பர் சிலர்” (தாயு. பரிபூரணா.

6).

மாயை-வ. மாயா. ஒ.நோ: சாயை-வ. சாயா (chaya). சாய்தல் = நிழல் விழுதல். சாயை = நிழல்.

மாள்-மாட்டு(பி.வி.). ஒ.நோ: நீள் - நீட்டு. மாளுதல்=முடிதல். செய்ய முடிதல். மாட்டுதல் = முடித்தல், செய்து முடித்தல்.

நான் இதைச் செய்ய மாட்டுவேன் = என்னால் இதைச் செய்ய முடியும்.

நான் இதைச் செய்ய மாட்டேன் = 1. என்னால் இதைச் செய்ய முடியாது(முன்னைப் பொருள்). 2. நான் இதைச் செய்ய விரும்பேன் (இற்றைப் பொருள்).

இங்ஙனமே, கூடுதல் முடிதல் ஆகிய துணைவினைகளும், உடன்பாட்டில் இயலுதற் பொருளையும், எதிர்மறையில் அல்லது அஃதின்றி அதனொடு விருப்பின்மை அல்லது விலக்குப் பொருளையும் உணர்த்தும். எ-டு: நான் வரக்கூடாது (விலக்கு).

நான் சொல்ல முடியாது (இயலாமையும் விருப்பின்மையும்).

இப் பொருள்களின் நேர்ச்சி இடத்தையும் காலங் குறித்த சொல்லையும் பொறுத்திருக்கும்.

எ-டு: நீ சொல்ல முடியாது (இயலாமை மட்டும்).

நாளைக்கு நான் இதைச் செய்யமாட்டேன் (விருப்பின்மையும் இயலாமையும்).