உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல் (பொருந்தற் கருத்துவேர்)

மாழா-மாழாம்பலம் = தூக்கம் (அக. நி.).

61

மாள்கு-மாள். மாளுதல் = 1. கெடுதல். 2. கழிதல். "மாளா வின்ப வெள்ளம்" (திவ். திருவாய். 4: 7: 2). 3. அழிதல். "அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள்" (ஈடு, 4: 7: 3), 4, சாதல். “வஞ்ச முண்மையேன் மாண்டிலேன்” (திருவாச. 5:93). 5. முடிதல், 6. செய்ய முடிதல், இயலுதல். அது என்னால் மாளாது (உ.வ.).

மாள்-மாய்.

ஒ.நோ: நோள்-நோய். நோளையுடம்பு = நோயுண்டவுடம்பு.

=

மாய்தல் 1. ஒளி மழுங்குதல். "பகன்மாய" (கலித். 143). 2. கவலை மிகுதியால் வருந்துதல். 3. அறப்பாடுபடுதல். அந்த வேலையில் மாய்ந்து கொண்டிருக்கிறேன் (உ.வ.) 4. "மறத்தல். "மாயா வுள்ளமொடு பரிசிறுன்னி” (புறநா. 139). 5. மறைதல். “களிறுமாய் செருந்தியொடு” (மதுரைக். 172). 6. அழிதல் “குடியொடு.. மாய்வர் நிலத்து” (குறள்.898). 7. இறத்தல். தம்மொடு தம்பெயர் கொண்டனர் மாய்ந்தோர்” மலைபடு. 553).

ம., தெ., க., து.மாய்.

மாய்த்தல் = 1. மறைத்தல். “களிறு மாய்க்குங் கதிர்க்கழனி” (மதுரைக் 247). 2. வருத்துதல் (உ.வ.) 3. கொல்லுதல். “மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த” (திவ். திருவாய். 4: 3: 4). 4. அழித்தல். “குரம்பையிது மாய்க்க. மாட்டேன்” (திருவாச. 5:54).

மாய்-மாய்கை = 1. மயக்கம். 2. பொய்த் தோற்றம்.

மாய்-மாய்ச்சல் = 1. வருத்தம் (W.). 2. மறைவு (சது.). 3. சாவு (யாழ். அக)

மாய்-மாய்ப்பு = 1. மறைவு (W.). 2. சாவு (W).

மாய்-மாய்வு = 1. மறைவு (சூடா.). 2. சாவு. "மாய்வு நிச்சயம் வந்துழி” (கம்பரா. இராவணன் வதை. 182).

மாய்-மாயம் = 1. கருமை (கறுப்பு)(சூடா.). 2. மயக்கம், வியப்பு, "மாயவன் சேற்றள்ளற் பொய்ந்நிலத்தே (திருவிருத். 100, உரை), 3. கனவு. "மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ" (சிலப். 16:61 ). 4. நிலையின்மை. “என்மாய யாக்கை யிதனுட் புக்கு” (திவ். திருவாய். 1073). 5. பொய். “வந்த கிழவனை மாயஞ் செப்பி" (தொல். களவு. 22). 6. அறியாமை (அஞ்ஞானம்). "மாய நீங்கிய சிந்தனை" (கம்பரா. சித்திர. 51). 7. வஞ்சனை. “மாய மகளிர் முயக்கு" (குறள். 918). 8. மாயை. "வருந்திட மாயஞ் செய்து நிகும்பலை மருங்கு புக்கான்" (கம்பரா. மாயா சீதை. 96).

மாயமாலம் = 1, பாசாங்கு. 2. மோசடி. 3. வஞ்சனையுள்ள பேய். (W.). மாயமாலம்-மாய்மாலம்.