உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

மைம்மை - மைம்மைப்பு

=

வேர்ச்சொற் கட்டுரைகள்

கண்ணிருளல், கண்

மங்கல்,

பார்வைக்குறை. “மைம்மைப்பி னன்று குருடு” (பழ.298). மைம்மை-மைமை-மைமல் = மாலைநேரம் (யாழ். அக.).

மைம்மை-மம்மல்

=

அந்தி நேரம்.

மம்மல்-மம்மர் = 1. மயக்கம். "மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும்" (நாலடி. 14). 2. காமம் (W.). 3. கல்லாமை. “காணாக் குருடராச் செய்வது மம்மர்" (நான்மணி. 24). 4. துயரம் (பிங்.). "மம்ம ரறுக்கு மருந்து கண்டாய்" (தேவா.

845:8).

மய-மயப்பு-மப்பு = 1. மயக்கம். 2. மட்டித்தனம். 3. செருக்கு. அவனுடைய மப்பை அடக்க வேண்டும் (உ.வ.). 4. முகில் மூட்டம். 5. செரியாமை.

தெ., க. மப்பு (mabbu).

99

மள்கு-மட்கு. மட்குதல் = 1. மயங்குதல். "மட்கிய சிந்தை" (கம்பரா. தைல. 5). 2. ஒளி மங்குதல். "நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான்' (கம்பரா. அயோத். 12). 3. அழுக்கடைதல். 4. வலி குன்றுதல். "தரியலர் முனைமட்க" (பாரத. மீட்சி. 176).

ஒ.நோ: வெள்-வெள்கு-வெட்கு.

மட்கு-மக்கு. மக்குதல் = 1. ஒளி மழுங்குதல். 2. அழுக்கேறுதல் (W.). தெ., க. மக்கு(maggu). 3. கருத்துப்போதல். வெள்ளி மக்கிவிட்டது. 4 மந்தமாதல். "மக்கிய ஞானத் தீயால்" (கைவல். தத். 90). 4. கெட்டுப்போதல் (W.). 5. அழிதல் (W.)

மக்கு = 1. மந்தன். அவன் கணக்கில் மக்கு (உ.வ.). 2. அறிவிலி. 3. சுவர் வெடிப்பில் அடைக்கும் அடைமண். 4. மரவேலையிற் சந்து தெரியாமல் அடைக்கும் தூள்.

மக்கு-மக்கன் = மந்தன்.

மக்கு-மக்கல் = 1. கருத்துப்போன வெள்ளி. 2. கெட்டுப்போன அரிசி. குறிப்பு: ஒரு கருத்து ஒரு அல்லது பல வழிகளில் தோன்றலாம்.

மள்கு-மாள்கு-மாழ்கு. மாழ்குதல் = 1. கலத்தல் (W.). 2. மயங்குதல். "குழறி மாழ்கி" (கம்பரா. மாரீசன் வதை. 237). 3. சோம்புதல் (திவா.)4 மங்குதல், கெடுதல். "ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை” (குறள்.

653).

ப. க. மாழ்கு(g).

மாழ்கு-மாழா. மாழாத்தல் = 1. ஒளி மழுங்குதல். "நாண்மதியே.... மாழாந்து தேம்புதியால்" (திவ். திருவாய். 2 : 1 : 6). 2. மயங்குதல். “மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து" (பொருந.95).