உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




59

முல்" (பொருந்தற் கருத்துவேர்) மையாந் தொடுங்கி" (பு.வெ. 9 : 13). 3. பொலிவழிதல். "மாந்த ரென்பவ ரொருவரு மின்றி மையாந்த வந்நகர்” (காஞ்சிப்பு. நகரேற். 101).

முள்-மள்-மக்கு. மள்குதல் = 1. ஒளி குறைதல். 2. குறைதல். “மள்கலில் பெருங்கொடை" (கம்பரா. கார்கால. 104).

மள்கு-மழுகு. மழுகுதல் = ஒளி குறைதல். "முத்துத் தொடை கலிழ்பு மழுக" (பரிபா. 6:16).

மழுகு-மழுங்கு. மழுங்குதல் = 1. ஒளி குறைதல். “கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல்" (கலித். 146). 2. பொலிவழிதல் (திவா.). 3. கவனிப்பின்றி மறைந்துபோதல் (W.). 4. கெடுதல்.

மழுங்கு-மழுக்கு. மழுக்குதல் = ஒளி குறையச் செய்தல். மழுக்கு-மழுக்கம் = ஒளி குறைகை.

மழுங்கு-மங்கு. மங்குதல் = 1. ஒளி குறைதல். 2. நிறங் குன்றுதல். 3. பெருமை குறைதல். 4. குறைதல். “தாக மங்குத லின்மையால்" (விநாயகபு. 80: 94).5. வாட்டமுறுதல் (W.). 6. கெடுதல். "தீவினைத் தெவ்வென்னும் பேர்மங்க" (திருநூற். 19). 7. சாதல். “மங்கியு முற்பவித்து முழல்வல் லிடரில்" (திருப்போ. சந். மட்டுவிருத். 7).

க. மக்கு(maggu).

மங்கு-மங்கல் = 1. ஒளி மழுக்கம் (சங். அக.). 2. இருள் கலந்த நேரம். 3. கெடுகை.

மங்குங் காலம் = வளங் குன்றுங்காலம். "மங்குங் காலம் மா; பொங்குங் காலம் புளி” (பழ.).

மங்குநோய்முகன்(சனி) = வாழ்நாளில் முதலில் வந்து ஏழரையாண்டு தீங்கு செய்யும் நோய்முகன்(சனி).

=

மங்கு = 1. கேடு. தெ. மங்கு, க. பங்கு(banku). 2. வங்கு. (W.).

மங்கு-வங்கு = 1. மேனியில் மங்கல் நிறமாகப் படரும் ஒருவகைப் படைநோய். 2. குளித்தபின் துவர்த்தாத மேனியிற் காணும் படைபோன்ற தோற்றம். 3. நாய்ச்சொறி.

மங்கு-மங்குல் = 1. ஒளிக் குறைவு. 2. கண்தெரியாவாறு ஒளி குறைந்த மூடுபனி. "மங்குல் மனங்கவர" (பு.வெ. 9: 45). 3. இருட்சி. "மங்குல் மாப்புகை' (புறம். 103). 4. இரவு (திவா.). 5. இருண்ட முகில். "மங்குறோய் மணிமாட.... நெடுவீதி" (தேவா. 41: 7). 6. கரிய வானம். "மங்குல்வாய் விளக்கு மண்டலமே' (திருக்கோ. 177). 7. வானவெளிப் பக்கமாகிய திசை. "புயன் மங்குலி னறைபொங்க" (கலித். 105 : 25).

முள் முய்-மய்-மை இருண்மை.

=

=

கருப்பு, இருள். மைம்மை கருமை,