உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஆசை.

மய-மயல் = 1. ஐயுறவு. "மயலறு சீர்த்தி" (பு.வெ. 9 : 7). 2. மயக்கம். "மயலிலங்குந் தூயர்" (தேவா. 121 : 2). 3. மந்தம் (யாழ். அக.). 4. "தண்டா மயல்கொடு வண்டுபரந் தரற்ற” (கல்லா. 20 : 6). 5. காம விழைவு. "மாதர் மயலுறு வார்கண் மருள்கொண்ட சிந்தை" (திருமந். 203). 6. கோட்டி(பைத்தியம்). "மயற்பெருங் காதலென் பேதைக்கு" (திவ். திருவாய். 4 : 4 : 10). 7. மாயை. “மயலாரும் யானு மறியேம்" (கம்பரா. நாகபா. 258). 8. அச்சம் (யாழ். அக.). 9. பேய் (பிங்.). 10. செத்தை. “வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ" (சீவக. 128).

ம. மய்யல், தெ. மயல, க. மயமு.

மயல்-மயற்கை = 1. மயக்கம். "மயற்கை யில்லவர்” (சீவக. 1346). 2. செத்தை (சீவக. 1393, உரை).

மயல்-மயர். மயர்தல் = 1. மயங்குதல். 2. திகைத்தல். “வைது கொன்றன னோவென வானவர் மயர்ந்தார்" (கம்பரா. கும்பக. 244). 3. சோர்தல். "மயரு மன்னவன்" (கம்பரா. இரணியன்வதை. 13). 4. உணர் வழிதல். "விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து" (கந்தபு. திருவி. 80).

மயர் = மயக்கம். "மயரறுக்குங் காமக் கடவுள்" (பரிபா.15: 37). மயர்-மயர்வு = 1. சோர்வு. 2. அறிவுமயக்கம் (பிங்.). 3. அறியாமை (அஞ்ஞானம்). “மயர்வற மதிநல மருளினன்" (திவ். திருவாய். 1 : 1 : 1).

மயர்-மயரி = 1. அறிவிலி. "மயரிக ளல்லாதார்" (இனி. நாற். 13). 2. காமுகன் "மயரிகள் சொற்பொருள் கொண்டு" (திருநூற். 53) . 3. பித்தன். "நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை" (மணிமே. 22:75).

66

மயல்-மையல் = 1. செல்வம் முதலியவற்றால் வருஞ் செருக்கு. மையல்...மன்னன்" (சீவக. 589). 2. காம மயக்கம். “மையல் செய்தென்னை மனங்கவர்ந் தானே யென்னும்" (திவ். திருவாய். 7 : 2 : 6).3. 7: கோட்டி(பைத்தியம்). "மைய லொருவன் களித்தற்றால்" (குறள். 838). 4 யானை மதம். "வேழ மையலுறுத்த" (பெருங். உஞ்சைக். 37 : 232).5 கருவூமத்தை (மலை).

மையலவர் = பித்தர். "மையலவர் போல மனம்பிறந்த வகை சொன்னார்" (சீவக. 2013).

மையலார் = 1. பித்தர். 2. மாய வினைஞர். "மண்மயக்கு மயக்குடை மையலார்” (இரகு. யாகப். 35).

மையலி = மாய வினையாட்டி (யாழ். அக.).

மையனோக்கம்

=

66

துயரப் பார்வை. 'மைய னோக்கம் படவரு

மிரக்கம்" (தொல். மெய்ப். 13, உரை).

மய-மையா. மையாத்தல் = 1. மயங்குதல். "மலர்காணின் மையாத்தி நெஞ்சே" (குறள். 1112). 2. ஒளி மழுங்குதல். "விண்மே லொளியெல்லா